Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all 178 articles
Browse latest View live

என்றென்றும் சுஜாதா –சுஜாதா ப்ரியர்களுக்காக…–அரவிந்த் சுவாமிநாதன்

$
0
0

சுஜாதாவின் மறைவிற்குப் பின் அவரது நினைவைப் “போற்றி” பல நூல்கள்/கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு இதழில் அவர் வாழ்க்கை பற்றிய தொடர் வெளியானது. சில எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள் நூலாக வந்தன. விகடன் கூட ’சுஜாதா மலர்’ என்ற ஒன்றினை வெளியிட்டது. என்றாலும் அவற்றையெல்லாம் படித்த எனக்கு ஏனோ நிறைவு வரவில்லை. சமீபத்தில் படித்த விகடன் பிரசுர வெளியீடான அமுதவனின் “என்றென்றும் சுஜாதா” ஒரு நல்ல நினைவுத் தொகுப்பு.

சுஜாதாவின் குழந்தைத் தனமான இயல்புகள், அவரது மென்மையான சுபாவம், கூட்டங்களில் பேசக் கூச்சம், நாவல்கள் எழுதுவதற்காக விஷயங்களைத் தேடிச் சேகரித்து, பல நபர்களைச் சந்தித்து, அந்தத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுத முற்பட்டது, எழுத்துலகிலும், திரையுலகிலும் அவரைப் பலர் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியபோதுகூட அதை பகிரங்கமாக வெளிப்படுத்தாத அவரது பெருந்தன்மை, சுஜாதா ஆதரித்த ஒரு எழுத்தாளரே சுஜாதாவைப் பற்றி தவறாக பிரசாரம் செய்தது என நாம் அறிந்த மற்றும் அறியாத புதிய பல தகவல்களை விரிவாகச் சொல்கிறது இந்த நூல். ”கறுப்பு வெள்ளை சிவப்பு “ (ரத்தம் ஒரே நிறம்) எழுதிய போது அவருக்கு நேர்ந்த சங்கடங்கள், சுஜாதாவுக்கு நெருக்கமாக இருந்து கொண்டே கலவரத்தைத் தூண்டி விட்ட சிலர், சுஜாதாவுக்கு சினிமாவை இயக்க வந்த வாய்ப்பு, சாவிக்கும் சுஜாதாவுக்குமான மனக்கசப்பு, அதை அமுதவன் தீர்த்து இருவரையும் ஒன்றிணைத்தது என்று நிறையவே சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

சுஜாதாவுக்கு ஒரு நூல் எழுதியதற்குக் கிடைத்த ராயல்டி ஒரு சில்வர் குடம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மற்றொரு நூலுக்குக் கிடைத்தது பேண்ட் பிட். அதுவும் கூட சுஜாதாவின் உயரத்துக்குப் பொருந்தவில்லை என்பதால் அவர் அதை அப்படியே வைத்து விட்டாராம். ஆனால் தனக்குப் பணம் வராதது, பதிப்பாளர்கள் ஏமாற்றியது குறித்து எந்த ஒரு புகாரும் அவரிடம் இல்லை. அதுதான் சுஜாதா.

”நம்மாள நாலுபேரு பிழைச்சிட்டுப் போறாங்க. போகட்டும்” என்று பெருந்தன்மையுடன் அவர் விட்டுக் கொடுத்தது அவரது மாண்பைக் காட்டுகிறது. சுஜாதாவை படம் இயக்கச் சொன்ன ஒரு மர்ம மனிதர் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சுஜாதாவுக்கு திருஷ்டிப் பொட்டாக அமைந்த ’பாய்ஸ்’ பட வசனம் பற்றி அவர் பேசத் தயங்கியது, வருந்தியது பற்றியும் அமுதவன் நூலில் கூறியிருக்கிறார். சுஜாதாவின் கடைசி கால கட்ட விவரணைகள் வருத்தத்தைத் தருகின்றன.

My Photo

“அமுதவன்” எழுதிய நூல் இது. அவரது நினைவுத் தொகுப்பு. ஆனால் கூடுமானவரை எந்த இடத்திலும் ‘தான்’ வராமல் சுஜாதாவையே எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கிறார். ஒரு நினைவுத் தொகுப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல உதாரணம். சபாஷ் அமுதவன்.

சுஜாதா ப்ரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

”என்றென்றும் சுஜாதா”, விகடன் பிரசுரம். விலை ரூ. 90/-



ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? –என்.கணேசன்

$
0
0

ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா,  கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் இது.

இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:    blackholemedia@gmail.com      செல்பேசி:   9600123146,  

விலை ரூ-90/-

நூலாசிரியர் என்.கணேசன் பற்றி…
[ganeshan1.jpg]
 என்.கணேசன்

ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி இணையத்தில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். இவருக்கு ஜோதிடத்திலும் மிகுந்த ஈடுபாடும், அனுபவமும் உண்டு. பல தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளன. இவரது ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் –என்.கணேசன்

$
0
0

வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!

இவை எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித் தர முடியாத, வாழ்ந்து படிக்கும் பாடங்கள். இவற்றைக் கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாது. இவற்றைக் கற்றுத் தேர்பவனே வெற்றி வாகை சூடுகிறான்; வாழ்வில் நிறைவைக் காண்கிறான்; கால மணலில் தன் காலடித் தடத்தை விட்டுச்
செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், குழம்பியும் வாழ்ந்து மடியும் போது இந்தப் பாடங்களை அறிந்து தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து முழுமையாக வாழ்ந்து
மனநிறைவுடன் விடை பெறுகிறான்.
-
வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!
-
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க. மின்னஞ்சல்: blackholemedia@gmail.com      செல்பேசி:   9600123146,  விலை ரூ-110/-
-
நூலாசிரியர் என்.கணேசன் பற்றி…
[ganeshan1.jpg]

ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி இணையத்தில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். பல தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளன. இவரது ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.


கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் –வேளுக்குடி கிருஷ்ணன்

$
0
0

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

‘கண்ணனை நினைக்காத நாளில்லையே…’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு.

-

அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, ‘பீஷ்மர் ஒரு ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்’ என்று சொல்லும் கண்ணன், அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன். பெருங்கருணை, ஜோதி வடிவமே பகவான், எமதருமனின் கனிவு, ஹரி… ஹரி.., திருமாலின் திருமேனி, வரம் தருவாய் வாசுதேவா.., கண்ணனின் விளையாட்டு, கட்டுண்டு கிடந்த கண்ணன், யமுனை ஆற்றிலே..! கண்ணன் இருக்க கவலை எதற்கு? மானம் காப்பான் தோழன்… என்று அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், வாழ்வின் உயரிய கருத்துகளை, மிகப் பெரிய குணத்தை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய பரவசத்தோடு சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஓவியர் மாருதியின் வண்ண ஓவியங்கள் உயிரோட்டமாக நடமாடுகின்றன. கண்ணனின் நாமங்களைச் சொல்லும் இந்த நூல், வாசிப்போரின் மனசை தாமரையாகப் பூரிக்க வைக்கும்.

-

Price: Rs. 115 ( india )
Price: Rs. 265 ( outside india )

சுஜாதா – Quiz

$
0
0

1

2

3

4

5

6

–இதை இங்கே பகிர்ந்து கொண்ட நண்பர் வெங்கட்ரமணனுக்கு  எனது மனமார்ந்த நன்றி…

சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர்.

-

சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா. விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன்.

-

‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை.

-

விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை… சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.


சங்கீத மும்மூர்த்திகள்! –என்.கணேசன்

$
0
0

இறைவனை மட்டுமல்ல, கேட்பவர் அனைவரையும் பரவசப்படுத்த முடிந்த இந்த மகா புருஷர்களைப் பெயரளவில் மட்டுமல்லாமல் இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ள இந்தச் சிறிய நூல் உதவும்.

-
சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இசைச்
சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள்.  மூவரின் இசையும் கர்நாடக சங்கீதத்தின் ரத்தினங்களாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.
-
அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த இவர்களை இவர்களுடைய இசையால்
மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும் அல்லவா?
 -
வாருங்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குப் பயணிப்போம்…..
-
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.
மின்னஞ்சல்:   blackholemedia at gmail dot com 
செல்பேசி: 9600123146,  விலை ரூ-75/-
நூலாசிரியர் என்.கணேசன் பற்றி…
[ganeshan1.jpg]
ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி இணையத்தில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். பல தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளன. இவரது ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

சுஜாதா – Quiz (with answers)

$
0
0

1

2

3

4

5

6

answers

answers_2

 

–இதை இங்கே பகிர்ந்து கொண்ட நண்பர் வெங்கட்ரமணனுக்கு  எனது மனமார்ந்த நன்றி…

சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர்.

-

சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா. விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன்.

-

‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை.

-

விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை… சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.


வெற்றிக்கு வித்திடும் விடியல் பொழுது!

$
0
0

காலைப் பொழுதின் உன்னதத்தைச் சொல்கிறது இந்தப் புத்தகம். சாதாரணமாக நாம் ஒருநாளில் என்ன செய்கிறோம்? காலையில் அரக்கப்பரக்க எழுந்து பிள்ளைகளுடன் சண்டைபோட்டு கிளப்பி, டிராஃபிக்கில் டென்ஷனாகி (சில சமயம் சண்டையும் போட்டு), ஆபீஸுக்குள் நுழைந்தவுடன் பெர்சனல் இ-மெயிலையும், ஃபேஸ்புக் அப்டேட்டையும் தலையாய கடமையாக முதலில் செய்கிறோம். ஏதாவது ஒரு மீட்டிங்கோ, பாஸிடம் இருந்து அழைப்போ, விசிட்டரோ, வேலை குறித்த போன் காலோ வரும்வரை இந்தநிலை தொடருகிறது என்கிறார் ஆசிரியர்.

கொஞ்சம் காலையில் நீங்கள் தூங்கி எழும் நேரத்தினை முன்னோக்கி நகர்த்தினால் குழந்தைகள் குதூகலத்துடன் பள்ளிக்குப் போகும்; உங்கள் குடும்பத்தை இன்று கவனிக்கும் தேவையான அளவைத் தாண்டி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனிக்க முடியும்; உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள முடியும் என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

இன்றைய வேகமான உலகில் விடிந்துவிட்டது என்றால் உங்களது நேரத்தை எல்லோருமாக கூறு போட்டு எடுத்து பகல்பொழுதை வேகமாக கரைத்துவிடுவார்கள். அதிகாலைதான் நம்முடைய நேரம். யாரும் கூறுபோட்டு எடுக்க முடியாது என்றாராம் ஒருவர். மதியம் ரெண்டு மணிக்கு ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு மணிநேரம் ஜாலியாக உட்கார்ந்திருக்க முடியாது. கூட்டத்தில் நம்மைத் துரத்திவிட்டுவிடுவார்கள். அதே காலை ஐந்துமணிக்கு ஜாலியாக ஒரு மணிநேரம் அமர்ந்து ரிலாக்ஸ் பண்ணி நம்முடைய நேரத்தை என்ஜாய் பண்ணலாம் என்றாராம் மற்றொருவர். காலையில் சீக்கிரம் எழுந்தால் நிதானமாக டிபன் சாப்பிடலாம். அடிக்கொருதரம் வாட்சைப் பார்க்க வேண்டியதில்லை, என்பவர் மற்றொரு ரகம்!

எப்படி பெர்சனல் ஃபைனான்ஸில் உங்களுக்கான பணத்தை உங்கள் வருமானத்தில் இருந்து முதலில் ஒதுக்குங்கள் (பே யுவர் செல்ஃப் ஃபர்ஸ்ட்) என்று சொல்கிறார்களோ, அதேதான் நேரத்திலும். ஒருநாளின் பொழுதில் முதலில் உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள் என்கிறார் ஆசிரியர். வாழ்க்கையில் ஒருநாளில் அர்ஜென்டாக செய்யவேண்டாத பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, உடற்பயிற்சி, பிரார்த்தனை, புத்தகம் படித்தல், வேலையில் முன்னேறுவது குறித்து யோசித்தல், பிசினஸை எப்படி வளர்ப்பது என்று யோசித்தல், குடும்பத்துக்குச் செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தல் போன்றவை. இவை அர்ஜென்டாக செய்ய வேண்டியதில்லை என்பதனாலேயே இவை செய்யப்படாமலேயே போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. இவை நடக்கவேண்டும் என்றால் ஒருநாளில் முதலில் இவை நடக்கவேண்டும். ஏனென்றால், விடிந்துவிட்டால் உங்கள் டைம் உங்கள் கையில் இல்லை என்கிறார் ஆசிரியர்.

அதிகாலையில் எழுவது வில்பவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்லும் ஆசிரியர், வில்பவர் என்பது காலையில் அதிகமாகவும் நாளின் பொழுது போகப்போக எப்படி குறைகிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். மாலையில் ஜிம்முக்குப் போகிறேன் என்று சொல்பவர்கள் யாரும் தொடர்ந்து சென்றதாக சரித்திரமில்லை என்று சொல்லும் ஆசிரியர், ஏனென்றால் மாலையில் உங்கள் டைம் உங்கள் கையில் இல்லை என்கிறார்.

காலையில் செய்யும் உடற்பயிற்சியே தொடர்ந்து செய்யப்பட்டுவரும். ஒவ்வொருநாளும் தூங்கி எழுந்தவுடன் காலையில் மனிதனிடம் முழு ரீசார்ஜ் செய்யப்பட்ட வில்பவர் இருக்கிறது. விடிந்துவிட்டாலோ ஒழுங்கில்லாத டிராஃபிக்கில் ஆரம்பித்து, கடித்துக்குதறும் பாஸ், கலகம் செய்யும் குழந்தைகள் போன்ற எரிச்சலூட்டும் விஷயங்களும், இன்டர்நெட், ஃபேஸ்புக், பிட்சா, பர்கர் போன்ற டெம்ப்ட் பண்ணும் விஷயங்களும் சேர்ந்து வில்பவரை கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு ஸ்வாகா செய்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர்.

அதேபோல், காலையில்தான் நாம் தளராத மகிழ்ச்சியுடன் கூடிய நம்பிக்கையில் திகழ்கிறோம் என்று சொல்லும் ஆசிரியர், ட்விட்டரில் இது குறித்து ஆராய்ந்தபோது காலை ஆறு மணிக்குமேல் ஒன்பது மணிக்குள்தான் ‘ஆஹா’, ‘சூப்பர்’ போன்ற கமென்ட்கள் அதிகம் வருகின்றது என்ற சான்றைச் சொல்கிறார். மற்ற நேரங்களில் இந்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லும் ஆசிரியர், அதனால் முக்கியமான விஷயங்களை அதிகாலைக்குக் கொண்டு சென்றுவிடுங்கள் என்று வாதிடுகிறார்.

அதிகாலைக்கு முக்கிய விஷயங்களைக் கொண்டு சென்று விட்டால் நாளடைவில் அது ஒரு பழக்கமாகிவிடும். அதனால் வில்பவரு டைய உபயோகமும் காலையில் செய்யப்படும் விஷயங்களில் குறைவாக இருக்கும். எனவே, நாள்முழுவதும் உபயோகிக்க வில்பவர் உங்களிடம் கொஞ்சம் அதிகமாகவே ஸ்டாக் இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், முக்கிய விஷயங்களை அதிகாலைக்கு கொண்டு சென்றுவிட்டால் முடிவெடுப்பதை ஆட்டோ-பைலட் மோடிற்கு போய்விடும் என்கிறார்.

காலையில் எழுந்தவுடன் பிரஷ்ஷை எடுத்து பேஸ்ட்டைப்போட்டு பல் துலக்க ஆரம்பிக்கிறீர்களே தவிர பல் துலக்கலாமா, வேண்டாமா என்ற முடிவெடுக்க யாரும் யோசிப்பதில்லையோ, அதேபோல், அதிகாலைக்கு நகர்த்தப்படும் முக்கிய முடிவுகளும் சுலபத்தில் எடுக்கப்படும் என்கிறார் ஆசிரியர். ஆனால், எந்தெந்த விஷயங்களை காலைக்கு நகர்த்த வேண்டும் என்பதில் கவனம் தேவை என்பதையும் சொல்கிறார்.

பகல் பொழுதில் எப்படியும் நடந்துவிடும் என்ற விஷயங்களை அதிகாலைக்கு நகர்த்தக்கூடாது என்று சொல்லும் ஆசிரியர், மூன்றுவிதமான காரியங்களை அதிகாலைக்கு நகர்த்த வேண்டும் என்கிறார்.

ஒன்று, வேலையில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பது மற்றும் செயல்படுவது. இரண்டாவதாக, குடும்பம் மற்றும் நண்பர்களிடம் நெருக்கமாக உறவாடுவது. மூன்றாவதாக, நம்மை நாமே செப்பனிடுவது – உதாரணத்துக்கு உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, க்ரியேட்டிவாகச் சிந்திப்பது.

இந்த மூன்று விஷயங்களையும் வெகுவிமரிசையாக விளக்கியுள்ளது இந்தப் புத்தகம்.

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்துகொண்டு திட்டமிட்டு செலவிடும் நேரத்தின் மீது கவனம் செலுத்தி உற்சாகமாகச் செயல்பட்டால் வெற்றி என்பது உங்கள் மடியில் தவழும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

வெற்றிபெற ஆசையில்லாத மனிதர்கள் உண்டா என்ன? அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறையேனும் படித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுகொண்டு முன்னேற முடியும்!

–நன்றி நாணயம் விகடன்

About the Book

Laura Vanderkam has combined her three popular mini e-books into one comprehensive guide, with a new introduction. It will help readers build habits that lead to happier, more productive lives, despite the pressures of their busy schedules. Through interviews and anecdotes, she reveals:

  • What the Most Successful People Do Before Breakfast—to jump-start the day productively.
  • What the Most Successful People Do On the Weekend—to recharge and prepare for a great week.
  • What the Most Successful People Do at Work—to accomplish more in less time.


தேடாதே –சுஜாதா

$
0
0

தேடாதே‘ பதற்றமூட்டும் குற்றக் கதை.

-

தேடாதே
தேடினால் காணாமற் போவாய்
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.
புவியரசு

சுஜாதாவின் இந்தக் குறுநாவலை அது பிரசுரமான காலத்தில் (1979) படித்த ஞாபகமில்லை.

மதுரையில் பிளாட்ஃபாரத்தில் வாங்கிய பௌண்ட் புத்தகங்கள் ஒன்றில் கிடைத்தது. ஒரு சிறுகதை அளவு விஷயத்தை இழுத்து நாவலாக்க முயன்றிருப்பது தெரிகிறது. கதையின் Anatomy யை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

1. சில பெரிய மனிதர்களுக்கு துணை நடிகைகளுடன் இருக்கும் தொடர்பு
2. ஆல்பம் தயாரித்து டைரக்டர்களுக்கு அனுப்பி வாய்ப்புத் தேடுவது (அப்போது இந்த செய்தி ரொம்பப் புதுசு)
3. இது போன்ற தங்கக் கூண்டிலிருந்து வெளியே போகும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் கொல்லப்படுவது

மேற்சொன்ன இன்புட்களை கோட்டார்ட் படிக்கும் அறிவுஜீவ புகைப்படக்காரன், எரிக்கா யாங் படிக்கும் ஆச்சரியமான துணை நடிகை, இமேஜ் பிராஸஸிங் போன்றவற்றோடு பிராஸஸ் செய்து கொஞ்சம் புகைப்படக் கலை கொஞ்சம் ஜென் என்று சப்ரொட்டீன்கள் சேர்த்தால் கிடைக்கும் அவுட்புட் 66 பக்க குறுநாவலாக இருக்கும்.

சின்ன கதையில் இவ்வளவு மசாலா சேர்த்ததால் வெறும் மசாலாவை ஒரு டம்ளரில் கரைத்துக் குடிப்பது போல் இருக்கிறது.

முதன் முதலில் ஒரு சுஜாதா கதை ‘ஐயெய்யே.. இவ்வளவுதானா?’ என்று நினைக்க வைத்தது.

தேடாதே

தேடாதே குறுநாவலில் இருந்து ஒரு பகுதி…..

“கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!”
“இப்படியா ஸார்.”

“இல்லை.  கொஞ்சம் இடது பக்கமா. தட்ஸ் இட்.  அப்புறம் மார்ல அந்த ஸாரியை  லேசா…  ஓ எஸ். போதும் !  ப்யூட்டிஃபுல்.  கொஞ்சம் சிரிங்க!  என் இடது கையைப் பாருங்க!  ரிலாக்ஸ்!  தட்ஸ் இட்! “

அப்பெர்ச்சர் எஃப்  8 .

ஸ்பீட் 125 .

காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் என் வ்யூஃபைன்டரில்  தீட்டப்பட்டாள்.  அவளை நிறையவே பார்க்க முடிந்தது.

கிளிக்!

“தாங்க்ஸ்!  நீங்க ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கிட்டு வாங்க.”

“நீச்சல் உடை இருக்குதுங்க.  நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.”

“போட்டுக்கிட்டு வாங்களேன்.”

உள்ளே சென்றாள்.

சென்றவளின் பெயர் தெரியாது எனக்கு.  வீட்டுக்குள் மாடி அறையில் நீச்சல் உடையில் பாய்ச்சல் காட்டுகிற மாதிரி  ஃபோட்டோ எடுத்துக் கொள்ள இவர்கள் எல்லோருக்கும் ஆசை.  நம் நாட்டுப் பெண்களுக்கு உடம்பு வாகு கிடையாது.  இடுப்பு பெரிசாக இருக்கும்.  கால்கள் குட்டையாகவும், தொடைகள் ஒன்று சேர்ந்தும் இருக்கும்.  நீச்சல் உடை எடுபடாது என்று சொன்னால் கோபம் வந்து விடும்.  எனக்கென்ன !  காசு கொடுக்கிறார்கள்.  எடுத்துடறேன்.

சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தேன்.  இல்லை அசங்கவில்லை.  உஷ்ண ராஜ்ஜியம்.  தென்னை மரத்தில் ஒரு காகம் வெயிலில் கரையக் கூட திராணியில்லாமல் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தது.  தூரத்தில் பள்ளிக்கூடத்தில் ஜன்னல் ஜன்னலாகப் பெண்கள்.  பெரும்பாலும் ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாகப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டு சரித்திரத்தில் இடமில்லாமல் சரியப் போகிறவர்கள்.  ஒரு சில பெண்கள் இடறிப் போய் உதறப்பட்டு… இவள் மாதிரி….

ஜோல்னாப் பைக்குள் கைவிட்டு கோடார்டின் திரைக் கதையைப் பிரித்தேன்;  என்றைக்காவது ஒரு நாள் பட்டாம்பூச்சியாகக் காத்திருக்கும் புழு நான்.  படித்து எம்.ஏ. ஆங்கில இலக்கியம்;  தொழில்… பார்த்தீர்களே,  இந்த மாதிரி கோடம்பாக்கம் கேஸ்களை எல்லாம் ‘உட்காரு,  படு’  என்று சொல்லி கிளிக். கிளிக்.  பிரசுரிக்கப் பத்திரிகைகள் இருக்கின்றன.  ஆல்பத்தில் விரலை ஓட்ட போதை நிறைந்த சினிமாச் சீமான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.  எடுத்துடறேன்.  அவ்வளவுதான்.  அதற்கப்புறம்  நடப்பது இருட்டு.  என் பேர் கணபதி சுப்ரமண்யம்.  இவ்வளவு நிறையப் பேரை வைத்துக் கொண்டு இந்த அவசர உலகத்தில் பிழைக்க முடியுமா ?  எனவே ஜி. யெஸ்.  பல பேருக்கு ஜி. யெஸ்.  என் முழுப் பெயர் அவர்களுக்குத் தெரியாது.

ஜியெஸ்-ஐ  நீங்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறீர்கள்.  ‘புகைப்படம் ஜியெஸ்’  என்று குமுதம்,  இதயம்,  கல்கி, குங்குமம், சாவி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறேன்.  இருக்கிற சினிமாப் பத்திரிகைகளுக்கெல்லாம் கவர்ச்சி படங்கள் சப்ளை அடியேன்தான்.  ஆனால் இந்தப் பெண்ணை இப்போது நான் எடுக்கும் ஃபோட்டோக்கள் எந்தப் பத்திரிகையில் வரும் என்று கியாரண்டியாகச் சொல்ல முடியாது.  தியாகராஜன் என்பவர் விலாசம் கொடுத்துவிட்டு அங்கே போய் ஃபோட்டோ எடுங்கள் என்றார்.  தியாகராஜன்  ஒரு மிடில் மேன்.  ஃபோட்டோ  பிடித்து ஏதாவது ஒரு சினிமாப் பத்திரிகையில் பிரசுரிக்க வைக்க வேண்டியது அவர் வேலை.  அதற்கு மொத்தம், சில்லறை என்று உண்டு.  எனக்கு,  காப்பிக்கு இவ்வளவு,  கலருக்கு இவ்வளவு,  என்லார்ஜ்மென்ட்டுக்கு இவ்வளவு என்று ரேட்டுகள். டெவலப்பிங் எல்லாம் நான்தான் செய்கிறேன்.  ஜி.என். செட்டி ரோடு சந்தில் ஸ்டுடியோ வைத்திருக்கிறேன்.
-
இந்தத் தொழிலில் நிறையப் பெண்களைப் பார்த்து விட்டேன்.  சினிமா ஒரு சாகசக் கன்னி. அவள் செய்கிற அட்டகாசம் பற்றி 250 பக்கத்துக்கு என்னால் புஸ்தகம் எழுத முடியும்.  இப்போது இந்தப் பெண் கூட சினிமாவில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் இத்தனை டிரஸ் போட்டுக் கொண்டும் கொள்ளாமலும் இத்தனை காட்டுகிறாள்.  இப்போது நீச்சல் உடையில் வரப்போகிறாள்.  ‘அப்படியே மேல இருக்கிறதை கொஞ்சம் ரிமூவ் பண்ணி ஒரு ஷாட் எடுத்துரலாமே’  என்றால் ‘தாராளமா’  என்று ‘பத்தினி தெய்வம் கண்ணகி’  என்பதற்குள் கழற்றி விடுவாள்…. சினிமா!

என்னைப் பொறுத்த வரையிலும் எல்லாப் பெண்களும் எனக்கு ஒன்றே.  எல்லோரும் என் நிக்கானின் வியூஃபைன்டரில் தெரியும் எஸ்.எல். ஆர். பிம்பங்கள். அவ்வளவுதான்.. ஒருத்தியைத் தொட்டதில்லை. ஒருத்தி மேலே பட்டதில்லை.  ஒருத்தியிடம் அசிங்கமாகப் பேசியதில்லை.  காதல் திட்டுக்கள் கிடையாது.  நான் எடுக்கும் ஃபோட்டோக்களில்  அசிங்கம், Porno இருக்காது.  ஆனால் பெண் உடம்பு ஒரு கலைப்பொருள்.  கலைக்கண்களோடு தான் நான் பார்க்கிறேன் என்பதெல்லாம் ஜல்லி, ரீல், உடான்ஸ், ஜபேட்டு!

நான் ஏறக்குறைய என் காமிராவில் பிற்சேர்க்கை ஆகிவிட்டேன்.  அவ்வளவுதான்.

இவள்கூட எல்லோரையும் போலத்தான் என்று நினைத்தேன்.  தவறு.

நீச்சல் உடையில் அவள் வரக் காத்திருந்தேன்.  சிகரெட்டுப் பிடித்து முடித்தாகிவிட்டது.  மறுபடி அந்த அறைக்குள் வந்தேன்.  சற்று வசதியாகவே இருந்தது.  மீன் முகத்தில் சுவரில் ஒரு வாஸ் போல இருக்க அதில் பிளாஸ்டிக் மலர்கள் சொருகியிருந்தன.  மேஜை மேல் ஒரு ‘டூ இன் ஒன்’  இருந்தது.  காசெட்டுக்களுக்கு என்று ஒரு சின்ன சுற்றுப் பெட்டி இருந்தது.  அலமாரியில் நிறையக் கோப்பைகளும் மெடல்களும் இருந்தன.  ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு உயர்நிலைப்பள்ளியில் குரூப் ஃபோட்டோவில் அத்தனைப் பெண்களும் பாவாடை தாவணி அணிந்திருக்க நட்ட நடுவே ஒரே ஒரு நன்.  கீழ் தட்டில் வரிசை வரிசையாக ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்து திடுக்கிட்டேன்.  ஒரு புத்தகத்தின் முதுகில் பெயரைப் பார்த்தேன்.

Zen and the art of Motor cycle Maintenance.

“ரெடி ஸார் !”

திரும்பினேன்.  நீச்சல் உடை பொருந்தியே இருந்தது.  கால்கள் நீளமாகவும், தொடை அரை படாமலும்,  சற்று வித்தியாசமானவள்.

“இது யார் ரூம்”  என்றேன்.

“என் ரூம்தான்.”

“அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க ?”

“நான் தான் ஏன் ?”

ஏன் என்று எப்படிச் சொல்வேன் ?  பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் ‘ராணி‘யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள்.  நீ எப்படி Zen படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம்.  பேச்சைத் தவிர்.  காமிரா மூலம் பேசு.

“உக்காருங்க.”

உட்கார்ந்தாள்.  சின்ன மார்பும்,  இலை போன்ற வயிறும்,  நீண்ட கால்களும்…  நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.

“முழங்காலை, முதல்ல கட்டிக்குங்க!”

ஃபிளாஷ் கைடு நம்பர் 80 :  100 ஏ.எஸ்.ஏ.  பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால் அபெர்ச்சர்  எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன். அவள் கலைத்தாள்.

“சிரிக்க வேண்டாம்.”

“ஏன் நல்லா இல்லையா ?”

“இந்த போஸுக்கு சிரிச்சா நல்லால்லே.”

“சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது”  என்றாள்.

“சிரியுங்க.  சிரிச்சு முடிச்சுட்டு வாங்க.  அப்புறம் எடுக்கலாம்.”

“கோவிச்சுக்கரீங்களா?”

“என் தொழில்லே கோபமே கூடாதுங்க!”

“என் தொழில்லயும்!”

“சிரிச்சாச்சா ?”

“ஆச்சு”

கொஞ்சம் நேச்சுரலா இருங்க.  பட்!  மறுபடி சிரிக்கறீங்களே ?”

“ஸார்,  என்னால சிரிக்காம இருக்க முடியல இப்போதைக்கு””சரி  கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்.  ஏதாவது பேசுங்க.””நீங்கதானே ஜி. யெஸ்.””ஆமாம்.””உங்க ஃபோட்டோக்களில்  ‘டெப்த்‘  நிறைய இருக்குது.”டெப்த்!  ஒரு புத்திசாலி வார்த்தை.  அவளை நேராகப் பார்த்தேன்.”படிச்சிருக்கீங்க!”  என்றேன்.“பி.ஏ. லிட்!  எலிசபெதன் டிராமா!”“”பின்ன ஏன்…..” என்று ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டேன்.“பின்ன ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க — கேள்வி அதானே ?”“ஹாலிவுட்ல  பிரசித்தமா ஒரு லைன் உண்டு. “

What’s a girl like you doing in a Place like this ?

“தெரியுமா?  வெரி குட்.  உங்க பேர் கேட்டே ஆகணும்.”

“அருணா”.

“ஏதாவது ஃபில்ம்ல சிவாஜிக்கு தங்கையா வந்திருப்பீங்களே?”

“இல்லை!  இன்னும் இல்லை.  அது இரண்டாம் படி.  நான் இப்ப முதல் படியே தாண்டலை.  ‘சட்டம் என் கையில்‘  பார்த்தீங்களா ?”

“வெயிட் எ மினிட்!   கமல் குடிச்சிட்டு டான்ஸ் ஆடறப்ப …..?”

“பின்னால நடனம் ஆடற பெண்களில் ஒருத்தி!”

“பி.ஏ. லிட்ரேச்சர் எலிஸபெதன் டிராமா!”

“நீங்க?”

“எம்.ஏ. லிட்ரேச்சர்!”

வசீகரமாகச் சிரித்தாள். கிளிக் !

“பின்ன ஏன்?”  — என்னை, என்னைப் போலவே கேட்டாள்.

நான் சற்று சிரித்தேன்.  “இப்ப என்ன ?”

“ஐ. வி.. சசி மாதிரி ஒரு ஆள்.  என்னைப் பார்த்து பிடிச்சுப் போய் திடீர்னு என்னை ‘பகல் நேரப் படுக்கைகள்’ னு ஏதாவது ஒரு படத்தில் கதாநாயகியாக்கி ஸ்விட்சர்லாந்து கூட்டிட்டுப் போவாங்களான்னு ஒரு சின்ன சிண்ட்ரெல்லா ஆசை.  அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் ?”

“மறுபடி ஆரம்பிக்கலாமா ?  சிரிப்பு வராதே?”

இப்படியே…கீழே கார்ப்பெட்..  நல்ல கான்ட்ராஸ்ட் இருக்குது…  மல்லாந்துக்குங்க பார்க்கலாம்.  நீங்க பாட்டுக்கு இங்கே அங்கே புரண்டு பேசிக்கிட்டு போங்க — க்ளிக் — உங்க பேர் அருணாங்கறது  — க்ளிக் –  எனக்குப் பிடிச்சுருக்கு — உங்க பேர் ஜி.யெஸ் ங்கறது எனக்குப் புரியலே — க்ளிக் — இப்ப சிரிச்சா நல்லா இருக்கும் — சிரிப்பு வரலியா ?  ஒரு ஜோக் சொல்லட்டுமா ?  அவள் மேல் படாமல் அவளுக்குக் குறுக்கே மண்டி போட்டுக் கொண்டு காமிராவை மாற்றி சில .. ஒரு ஜோக் சொல்லட்டுமா … ஒருத்திக்கு ரெட்டைக் குழந்தைகள்.  மூணு வயசிலே பொண்ணும் பிள்ளையும்.  இரண்டையும் சேர்த்து வெச்சு குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாளாம்.  அப்ப பொண்ணு கேட்டுச்சாம்….

“ரேஷநெலி ஆஃப்  தி டர்ட்டி ஜோக்”  என்றாள்.

“படிச்சிருக்கியா ?”

க்ளிக் — க்ளிக் !

ரோல் தீர எடுத்தேன்.  கொஞ்சம் இருங்க.  ரோல் மாத்திக்கிடறேன்.  நீங்க அதுக்குள்ள சட்டை கிட்டை ஏதாவது….”

“நீங்க போட்டுட்டு இருக்கிற சட்டை நல்லாருக்கு!”

“நான் ஒன்றும் பேகன் இல்லை.  மேலும் உங்களுக்குப் பெரிசா இருக்கும்.”

“இந்த ‘உங்களுக்கு’  பிசினஸ் எல்லாம் வேண்டாம்!  அப்புறம்,  இந்த தங்கச்சி, அக்கா, அது இது எல்லாம் ஆரம்பிக்கும்!  வேண்டாம்  ‘உனக்கு’  சொல்லுங்க !” — உள்ளே சென்றாள்.  வசீகரமான பெண்.

ஜீன்ஸ் போட்டுக்கலாமா என்றது கதவு.

“போட்டுக்கலாம்!”

“நீங்க சட்டையைக் கேட்டப்புறம் எனக்கு நினைவு வரது!  ஒரு ஆள் ஃபோட்டோ  பிடிச்சுக்க என்கிட்டே வந்தார்.  சரியான சட்டைகூட இல்லை. பாவம்.  என் சட்டையை அவிழ்த்துக் கொடுத்துப் போட்டுக்கச் சொல்லி படம் எடுத்தேன் !  இப்ப அந்த ஆள் பெரிய ஆளு!”

“யாரு பாரதிராஜாவா ?”

“சேச்சே !  இன்னொருத்தர்!”

“யாரு ?”

“சொல்ல மாட்டேன்.  கிசு கிசு பாணியில் சொல்லப் போனா இரண்டெழுத்துள்ள  இளம்பிறை நடிகர்!”

வெளியே வந்தாள்.

“வாவ்!”  என்றேன்.

“நான் எத்தனையோ பெண்களைப் ஃபோட்டோ  எடுத்திருக்கேன்.  இது வரைக்கும் வாவ் சொன்னதில்லை.

“இது ஒண்ணும் நல்லதுக்கு இல்லை!  கொஞ்சம் பழகின பாதையில் போய்க்கிட்டு இருக்கு உரையாடல்!”

நான் புதிய ரோலைப் போட முற்பட…..புதிய ரோல் கொண்டு வர மறந்து விட்டேன்!

“ஸாரி  ஃபிலிம் இல்லை !  வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரணும்!”

“பின்ன இதுவரைக்கும் எடுத்தது எல்லாம் ?”

“அதெல்லாம் ஃபிலிம்  இருந்துதான் எடுத்தேன்!”

“அதானே பார்த்தேன் .  சும்மா வெறும் டப்பாவைத் தட்டிக்கிட்டு இருந்தீங்களோன்னு…  சரி அப்ப பாண்ட்டு மாட்டிக்கிட்டது வேஸ்ட்டா?”

“நான் ஸ்டுடியோவுக்குப்  போய் எடுத்துட்டு வந்துடறேன்!”

“கார்ல வந்திருக்கீங்களா ?”

“இல்லை,  ஜாவா!”

“அப்ப ஒண்ணு செய்யுங்க!  என்னை மவுண்ட் ரோடில் விட்டுடுங்க.  ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்கு….”

“பாக்கி ஃபோட்டோ  ?  தியாகராஜன் மூணு ரோல் எடுக்கச் சொல்லியிருக்காரு!”

“சாயங்காலம் வர முடியுமா ?”

“எத்தனை மணிக்கு ?”

“ஏழு ஏழரைக்கு மேல …?”

“சரி,  வரேன்.”

அவள் தன் வீட்டின் கதவைப் பூட்டினாள்.

“தனியாவா இருக்கீங்க ?”

“கூட ஒரு உறவுக்காரப் பொம்பள இருக்குது.  ‘கல்யாணராமன் ‘  போயிருக்குது.  நாலாந்த்தரம்!”

வீடே ஒதுக்குப்புறமாக இருந்தது.  கட்டாத மனைகள் நிறைய இருக்கும் புதிய காலனி.  அண்ணாமலைபுரத்தைத்  தாண்டி….

“ஊருக்குள்ளே வீடு அகப்படலையா உங்களுக்கு ?”

“ஊருக்கு வெளியே இருந்தா சில சௌகரியங்கள் இருக்குது !”

“என்ன சௌகரியங்கள் ?”

“ஜியெஸ்  நீங்க ஜாஸ்தி கேள்வி கேட்கறீங்க!”

“சாரி, நன் ஆஃப்  மை பிசினஸ்!”  என்று மோட்டார் சைக்கிளை உதைத்தேன்.  காமிரா சாதனங்களை தோளில் ஜாக்கிரதையாகப் பெட்ரோல் டாங்கில் வைத்துக்கொண்டேன்.  லென்ஸ் பெட்டிகளை பக்கவாட்டுப் பெட்டியில் திணித்து அவளுக்கு இடம் பண்ணிக் கொடுத்தேன்….

“யோசிச்சுப் பார்த்தா என் மோட்டார் சைக்கிள்ள ஏர்ற முதல் பெண்மணி நீங்க!”

“கை தட்டுங்க!  கற்பு ஜாஸ்தின்னு தெரியுது உங்களுக்கு!’

புறப்பட்டோம்.

என் மேல் இயல்பாகப் பட்டுக்கொண்டே வந்தாள்.

“அடிக்கடி ப்ரேக் போடறீங்க!”  என்றாள்.

“உலகத்தின் ஆச்சரியங்களைக் காலி பண்ணவே முடியாது!”  என்றேன்.

“ஏன்?”

“நீங்க Zen படிக்கிறீங்களா ?

“ஒரு கதை சொல்லட்டுமா ?”

“சொல்லுங்க!”

“நான்-இன் — ஒரு குருவுடைய பேரு.  1912 வரை இருந்தவர்.  அவரைப் பார்க்க ஒரு ப்ரொஃபசர் வந்தாராம்.  ‘ஜென்’ ன்னா என்னன்னு கேட்டாராம்.

நான்-இன்,  அவருக்கு முதல்ல ஒரு கோப்பையில் டீ ஊத்திக் கொடுத்தாராம்.  கோப்பை நிரம்பிப் போச்சு.  இவர் ஊத்திக்கிட்டே இருக்காரு.  ப்ரொஃபசர் பார்த்துக்கிட்டே இருக்கார்.  “கோப்பை நிரம்பிப் போச்சு!  வழியுது.  மேலே மேலே ஊத்தறீங்களே ?”

“இந்தக் கோப்பையைப் போல நீ, உன்னுடைய சொந்த அபிப்ராயங்கள், கவலைகள்,  சந்தேகங்களாலேயே நீ ரொம்பிக் கிடக்கிறே!  உனக்கு நான் எப்படி ‘ஜென்’னுனா  என்னன்னு  சொல்ல முடியும் ? முதல்லே உன் கோப்பையைக் காலி பண்ணிக்கிட்டு வா!”

“படிச்சிருக்கீங்களா ?”

“படிச்சிருக்கேன்.  ஆனா நீ சொல்லி ஒரு தடவை கேட்கலாம்னுட்டுத்தான் சும்மா இருந்தேன் !  அருணா  ஐ லைக் யு !”

“எதிர்த்தாப்பல பஸ்ஸு!”

அவளை மவுண்ட் ரோடில் உம்மிடியார் சென்டருக்குள் இறக்கி விட்டேன்.  அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு யாரையோ பார்த்து “ஹாய்’  என்று சொல்லி அவள் சிரித்த போது என் வயிற்றில் பொறாமை மூண்டது.  நான் பார்த்தது அவளின் ஒரு சிறு பகுதியைத்தான்.  இன்னும் நிறைய ‘அவள்‘ இருக்கிறாள்!   தேட வேண்டும் !


புத்தாண்டு டைரி –வாணிஸ்ரீ சிவகுமார்

$
0
0

kadugu

புத்தாண்டு என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காலண்டர். அடுத்தது டைரி.. டைரி எழுதும் பழக்கம் இருப்போரும், சில வரவு செலவு கணக்குகளை எழுதுவோரும் டைரியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லை என்றால், அலுவலகத்திலோ, நண்பர்களோ டயரியை கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள்.

எல்லோரும் டைரி எழுதினால், இங்கே நகைச்சுவை எழுத்தாளர் கடுகு, டைரி பற்றி ஒரு நகைச்சுவை கட்டுரையே எழுதிவிட்டார்.

டைரியை பற்றி  “கமலாவும்… நானும்’ என்ற நூலில் “டைரியும் நானும்’ என்ற கட்டுரையில் நகைச்சுவை எழுத்தாளர் “கடுகு’ எழுதிய ஒரு சிலவற்றை காணலாம்.

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. அதற்கு முதல் காரணம் சோம்பேறித்தனம். இரண்டாவது, நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும்! அந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி பாடாய்ப்படுத்தும்!

என்னைக் கேட்டால் டைரிகளில் 80 சதவீதம் புதுக்கருக்கு அழியாமல் இன்னும் பல வருஷங்கள் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். பத்து சதவீத டைரிகள் முதல் இரண்டு பக்கம் மட்டும் எழுதப்பட்டு (இன்று புத்தாண்டு. புது வருஷம் பிறந்தது!) இருக்கும். மீதி பத்து சதவீத டைரிகள் பால் கணக்கு, தயிர்க் கணக்கு, நோட்டுப் புத்தகமாக உபயோகப்படுத்தப்படும். எல்லாருமா அனந்தரங்கம் பிள்ளை மாதிரியோ, சாமுவேல் பீப்ஸ் மாதிரியோ டைரி எழுத முடியும்?

சாமுவேல் பீப்ஸ் டைரி சுமார் ஒன்பதரை வருடக் குறிப்புகள். கிட்டத்தட்ட 15 லட்சம் வார்த்தைகள்! தனது தனிப்பட்ட எண்ணங்களை யாரும் படித்துவிடக் கூடாது என்று கருதி “டேக்கி கிராஃபி’ என்ற ஏறக்குறைய உலகமே மறந்துவிட்ட சுருக்கெழுத்து முறையில் எழுதியிருந்தார். அப்படியும் 100 வருஷங்களுக்குப் பிறகு பெரும் முயற்சி எடுத்து அதையும் படித்துவிட்டார்கள். எனக்கு டேக்கி கிராஃபி தெரியாது. நான் டைரி எழுதாததற்கு அதுவும் ஒரு காரணம்.

இன்னொரு அல்ப காரணமும் உண்டு. உதாரணமாக டைரியில் குப்புசாமிக்கு இன்று 5 ரூபாய் கடன் கொடுத்தேன் என்று எழுதியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருஷம் கழித்து இதைப் பார்த்தால் யார் இந்தக் குப்புசாமி? அவருக்கு எதற்கு 5 ரூபாய் கடன் கொடுத்தேன்? உண்மையிலேயே வெறும் 5 ரூபாய்தானா அல்லது ஐயாயிரம் என்பதைச் சுருக்கி “ஐந்து’ என்று எழுதினேனா? என்பது போன்ற பல கேள்விகளால் தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்!

இவையெல்லாம் போகட்டும் என்று விட்டுவிட்டால்கூட, கொடுத்த பணத்தை குப்புசாமி திருப்பிக் கொடுத்தானா, மறந்து விட்டோமா? பணம் கோவிந்தாதானா? என்று பல கேள்விகள் மண்டையைக் குடையும்! எதற்கு இத்தனை தொல்லை? டைரி எழுதாவிட்டால் ஒரு வம்பும் இல்லையே! அதனால்தான் நான் டைரி எழுதுவதில்லை! இது ஒரு சமூக சேவை என்று உங்களில் சிலர் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! என முடித்திருந்தார்.

–நன்றி தினமணி வலைப்பூ

தொடர்புடைய பதிவு…

கமலாவும் நானும் – புத்தக விமர்சனம் சுபத்ரா


தூய்மைக்கு ஒரு வடிவம் எஸ்.ஏ.பி. –டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன்

$
0
0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12!

பத்திரிகை உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் பிறந்த நாளும் டிசம்பர் 12.

231

எஸ்.ஏ.பி. குமுதம் பத்திரிகையை நவம்பர் 1947ல் துவக்கினார். முதல் இதழ் 2000 பிரதிகள் விற்றது. அவர், அடுத்த 47 ஆண்டுகளுக்கு அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகைத் துறையில் பல வெற்றிகளைக் கண்டார். விற்பனையை ஆறு லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றார்.

எஸ்.ஏ.பி. அப்போதுதான் எம்.ஏ. முடித்து பி.எல். சட்டப் படிப்பும் பாஸ் செய்திருந்தார். அவர் அத்தனை புத்தகங்களிலும் படித்து ஆசைப்பட்டு பல நாட்கள் திட்டமிட்டு வைத்திருந்த கனவு நனவாகவிருந்தது. அந்தக் கனவு, ஒரு மாதத்தில் ஆறு ஐரோப்பிய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பது.

எல்லா விசாக்களும் வாங்கியாகிவிட்டது. இன்னும் ஒரே ஒரு விசாதான் பாக்கி. அதைப் பெறுவதற்காகக் கான்சல் அலுவலகத்துக்குச் சென்றிருந்தார். இரண்டு வாரத்தில் புறப்பட வேண்டியிருந்ததால் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட விரும்பினார்.

விசா அலுவலகத்திலிருந்த வயதான அதிகாரி எஸ்.ஏ.பி.யின் விண்ணப்பத்தைப் பரிசீலித்தார். எல்லாம் இருந்தது. அவர் எஸ்.ஏ.பி.யை ஒரு மாதிரியாகப் பார்த்தார். எஸ்.ஏ.பி.க்கு அப்போது 24 வயது. அவருக்கு அதிகாரி ஏன் அப்படிப் பார்க்கிறார் என்பது முதலில் விளங்கவில்லை. ஒரு மாதிரி ஏக்கமான சோகமான பார்வை அது. அல்லது பொறாமையா?

-

‘‘எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள். எனக்கும் போக ஆசைதான். ஆனால் என்னிடம் அத்தனை பணம் இல்லை. ஆனால் நீ? இத்தனை இளவயதில் உன்னால் செல்ல முடிகிறது. இந்தா உன் விசா. சென்று வாரும்.”

எஸ்.ஏ.பி. வீட்டுக்கு வந்ததும் சற்று படபடப்பாக இருந்தார். அவருக்கு அந்த தினத்தின் சம்பவங்கள் ஒரு சங்கடமான வினோதமான உணர்ச்சியை ஏற்படுத்தின.

ஒரு சக மனிதனின் பொறாமைக்கு உள்ளாகிவிட்டோம். அந்த இள வயதில்கூட எப்போதும் வெள்ளைக் கதராடை உடுத்திக் கையில் வாட்சுகூட கட்டுவதில்லை. இருந்தும் மற்றொரு மனிதனின் பொறாமைக்குள்ளாகிவிட்டோம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்கவில்லை. மறு தினம் தீர்மானித்துவிட்டார். தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார். யாராலும் அவருடைய முடிவை மாற்ற முடியவில்லை.

எஸ்.ஏ.பி.யின் வாழ்வில் இதுபோன்ற எளிமை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம்!

(டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் எழுதிய ‘தூய்மைக்கு ஒரு வடிவம் எஸ்.ஏ.பி.’ புத்தகத்திலிருந்து…)
***


மேற்கத்திய ஓவியங்கள் ஓர் எளிய அறிமுகம் –பி.ஏ.கிருஷ்ணன்

$
0
0

P.A.Kirishnan

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் “மேற்கத்திய ஓவியங்கள் ஓர் எளிய அறிமுகம்” என்ற நூலை எழுதியுள்ளார். நூலின் விலை மார்ச்சுக்குள் வாங்கினால் ரூ.500 அதன் பிறகு ரூ.850. நாம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன் பதிவு செய்தால் அது புத்தகத்தை அச்சிட உதவும் என்று விரும்புகிறார்.

பி ஏ கே ஒரு நாவலாசிரியர் மட்டும் அல்லாது வரலாற்றுப் பின்புலமும் ஓவிய ரசனையும் உடையவர். மேற்கத்திய பாணி ஓவியங்களையும் பிரபலமான ஓவியங்களையும் ரசனையுடன் அணுக வேண்டிய விதங்களை அந்த ஓவியங்களுடன் விளக்கியுள்ளார். தமிழில் இவை போன்ற ஓவிய ரசனைக்கான நூல்கள் அபூர்வமாகவே வருகின்றன. ஏற்கனவே அரவக்கோன் என்பவர் எழுதிய ஒரு நூல் உள்ளது. அது இந்திய பாணி ஓவியங்களுக்கானது.
-
அன்புடன்
ராஜன்

1-தோசையம்மா தோசை –பா.ராகவன்

$
0
0

மசாலா தோசையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு ? இந்தியாவின் டார்லிங் அதுதானாம். தேசம் முழுதும் பெருவாரி மக்களால் விரும்பப்படும் உணவுப்பொருள் தோசைதான் என்று வேலை மெனக்கெட்டு சர்வே எடுத்து கலர் கலராகப் படம் போட்டுப் புல்லரித்திருக்கிறது அவுட்லுக்.

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை தோசை கிடைப்பது பெரிய விஷயமல்ல. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களுக்கும் இதுவே ஃபேவரிட் என்பது சற்றே வியப்புக்குரிய விஷயம்தான். அந்தந்தப் பிராந்திய உணவு என்று எது இருந்தாலும், தோசையைப் பார்த்தால் விழி விரிக்காத இந்தியர் கிடையாது.

ஒரு நூறு டிபன் ஐட்டங்களை மொத்தமாக ஒரு டேபிளில் வைத்தால், அதில் தோசையும் இருந்தால் பெரும்பாலானவர்கள் முதலில் எடுக்கக் கூடிய ஐட்டம் அதுதான் என்று சில வருடங்களுக்கு முன்னர் காஸ்மோபாலிடன் பத்திரிகையில் ஒரு செய்தித் துணுக்கு வந்தது. அவர்களும் இதற்காக வேலை மெனக்கெட்டு பல்வேறு இடங்களில் பரிசோதனையெல்லாம் நடத்தித் தான் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள்.

உணவின் வரலாறு

உணவின் கதையை வாசிக்கத் தொடங்கும்போது, அது மனித குலத்தின் வரலாறாகவே நீண்டுவிடுவது தற்செயலானது அல்ல. நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரையிலான உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்தபோது, முற்றிலும் புதிய, வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது. இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் ருசிக்கான தேடலின் விளைவே.

தேன், பட்டாணி, அரிசி, கிழங்கு முதல் ஹாம்பர்கர், குரங்கு சூப் வரை இந்நூல் தொட்டுக்காட்டி விவரிக்கும் நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உலகெங்கும் வாழும் பலவிதமான மனிதக் குழுவினரின் ருசி வித்தியாசங்களை காலம் தோறும் மாறும் ரசனையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு ருசிகரமான வாசிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!


பரம(ன்) இரகசியம் –என். கணேசன்

$
0
0

[ganeshan1.jpg]

640 பக்கங்களில், 90 அத்தியாயங்களில், தரமான தாள்களில், கண்களை உறுத்தாத எழுத்துகளில் வெளிவந்துள்ள பரம(ன்) இரகசியம் நாவலின் விலை ரூ.550.

வாசக நண்பர்கள் தங்கள் நல்லாதரவை இந்த நூலிற்குத் தர வேண்டுகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

நாவல் முன்னுரையில் இருந்து சில வரிகள்…

…பலர் இந்த சம்பவங்கள் நிஜமா, சில கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களைச் சுட்டிக் காட்டுகிறதா என்றும் அடிக்கடிக் கேட்டதுண்டு. தனிப்பட்ட நிஜ மனிதர்களை மையமாக வைத்து நான் இந்த நாவலை எழுதவில்லை. சித்தர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும், இதில் வரும் சம்பவங்களும் கற்பனையே. ஆனால் கதாபாத்திரங்களிலும், சம்பவங்களிலும் உண்மையின் சாயலை நீங்கள் பார்க்க முடியும். அந்த சாயலில் நீங்கள் சிலரை அடையாளம் காண்பதாக உணரவும் வாய்ப்புண்டு. அப்படிக் கண்டால் அது தற்செயலானதே.

இந்த நாவலின் விசேஷ மானஸ லிங்கமும் என் தனிக் கற்பனையே. ஆனால் அந்தக் கற்பனையில் மகத்தான உண்மையை நான் கலந்து படைத்திருக்கிறேன். நம்முள்ளே இருக்கக் கூடிய, கடுமையாக முயற்சித்தால் உணரக் கூடிய மகாசக்தியைச் சில கற்பனை பூச்சுக்கள் பூசி இதில் காட்டியிருக்கிறேன்.

இந்த நாவலில் இரண்டு இடங்களில் என்னை மீறிய ஒரு சக்திக்குப் பங்குண்டு. அது என் ஆழமான எண்ண வெளிப்பாடா, இல்லை ஏதோ ஒரு வெளிசக்தியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது நியாயமாக இருக்கும் என்பதால் தெரிவிக்கிறேன்.

ஒன்று விசேஷ மானஸ லிங்கம் குறித்த ஓலைச்சுவடிகளில் ஒரு செய்யுள் போன்ற வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கினேன். மறு நாள் காலை செய்யுள் தயாராக என் மனதில் இருந்தது. கதைக்குப் பொருத்தமாய், ஒரு மாபெரும் உண்மையை உள்ளடக்கியதாய் அந்த இருவரிச் செய்யுள் வந்தது எப்படி என்று இன்னும் எனக்கு திகைப்பாகவே இருக்கிறது.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம்
மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

‘தூய உள்ளமும் அறிவும் சேர்ந்து தூங்காமல் தேடினால் மெய்ஞானம் பெற முடியும். உள்ளம், அறிவு, ஞானம் மூன்றும் சேர்ந்து காத்தால் பூவுலகம் அழியாமல் மிஞ்சும். இல்லையேல் சிவஞானம் என்ற இறைஞானம் கூட அழிக்கும் விஷமாக மாறி விடும்’ என்று பொருள் சொல்லலாம். இங்கே தூங்காமல் என்பதற்கு சோம்பல் இல்லாமல், தளராமல் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

இன்னொன்று விசேஷ மானஸ லிங்கத்தின் முடிவு. நான் ஆரம்பத்தில் வேறொரு முடிவைத் தான் எண்ணி வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு நாள் கனவாய் வந்து மறைந்த காட்சி தான் இந்த நாவலில் விசேஷ மானஸ லிங்கத்தின் கடைசிக் காட்சியாக மாறி விட்டது. விசேஷ  மானஸ லிங்கம் கடைசிக் காட்சியில் தன்னை அப்படி எழுதி முடிக்க என்னைப் பணித்ததோ என்ற பிரமிப்பும் கூட எனக்கு மிஞ்சுகிறது.

அன்புடன்,
என்.கணேசன்

[ganeshan1.jpg]

ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி இணையத்தில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். பல தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளன. இவரது ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

2-தோசையம்மா தோசை – பா.ராகவன்

$
0
0

உலகம் முழுவதையும் சுண்டி இழுக்கும் இந்த உணவுப் பொருள், ஒரு கர்நாடகச் சரக்கு. மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கிருஷ்ணராலும் ஹோட்டல்களாலும் புகழ் பெற்ற உடுப்பிச் சரக்கு. பூவுலகில் இட்லி அவதரித்த பிறகு உற்பத்தியான தின் பொருள். Thin பொருளாகவும் இருப்பதனால் அதற்கு மவுசு அதிகமாகிவிட்டது.

இந்த உடுப்பியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஹிந்து மதாசாரியர்களுள் ஒருவரான மத்வர் இந்த ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர். அவரது ‘த்வைத சிந்தாந்தம்’ அத்வைத, விசிஷ்டாத்வைதங்கள் அளவுக்குப் பரவலாகவில்லையென்றாலும், நமது உணவு முறையை ஆன்மீகத்துடன் இணைத்து, சத்வ குணம் மேலோங்குவதற்கு (சத்வ குணமென்றால் சாது குணம் என்று எளிய பொருள் கொள்ளலாம்.) உகந்த முறையில் மாற்றியமைக்க, இவரது வழியைப் பின்பற்றிய உடுப்பிக்காரர்கள் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

உடுப்பி உணவு முறை என்பது சற்றே விசேஷமானது. நம்மூர் உடுப்பி ஹோட்டல்களில் இன்றைக்குக் கிடைக்கக் கூடிய உணவெல்லாம் ஒரிஜினல் உடுப்பி உணவாகாது. வேத கால சமையல் முறைகளை அப்படியே அடியொற்றிய, ஒரு மாதிரி நவீன சமையல் அது.

உணவின் வரலாறு



ஏலியன்கள் இருக்கிறார்களா? –அருண் நரசிம்மன்

$
0
0

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை கலர்ல, ஓவல் மூஞ்சியுடன், குச்சிக்கால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்”.

எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் முழுவதுமாய் மாறுபடாமல் (விவரணையை மீண்டும் படித்துப்பாருங்கள்) சொல்லிக்கொண்டே போகிறாள்.

“நிறுத்து நிறுத்து. இரும்மா; புத்தனாம்பட்டியே பார்க்கலை நீ, எங்கு புளூட்டோ வரை சென்று ஏலியன்களை பார்த்தாய்?” என்றேன்.

“ஐய்யோ அப்பா, நான் சொல்வது Calvin Hobbesஇல் வரும் ஏலியன்கள். கார்டூன்கள். நிஜத்தில் அவர்கள் கிடையாது.”

“ஓஹோ, அப்ப மற்ற கிரகங்களில் உயிரே கிடையாதா?”

“ஆமாம்பா, நம்மமாதிரி கிடையாது. பாக்டீரியா மாதிரி வேணா இருக்கலாம்.”

ஏலியன்கள் பற்றி நம் அனைவருக்கும் ஒரு மனப்பிம்பம், கருத்து, இருக்கிறது.

வானியல் செய்திகளில் அடிபடும் ஏலியன்கள் என்ற சொல்லுக்கு, நம் உலகில் இல்லாத உயிரினம் என்று பொருள்கொள்ள எத்தனித்து, வேற்றுகிரகவாசிகள் என்கிறோம். நம் உலகில் இல்லாத ஒரு புதிய உயிரினம் என்பது வரை சரி. அது, அவர்கள், வேற்று கிரகத்தில் வசிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விண்வெளியில் (outer space) வாழலாம். ஏலியன்கள் ஒரு அறிவுடைய நீல நிறச்சாயலாகக்கூட இருக்கலாம், டக்ளஸ் ஆடம்ஸ் Hitchhikers guide to the Galaxy போன்ற விஞ்ஞான-நகைச்சுவை கதைப்புத்தகங்களில் குறிப்பிடுவது போல. இன்றைக்கு, 2014இல், நாஸா விஞ்ஞானிகள் ஏலியன்கள் இருந்தால் அவை ஊதா நிற நுண்ணுயிர்களாக (பர்ப்பிள் பாக்டிரியா) இருப்பதற்கே சாத்தியம் அதிகம் என்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகள் என்று தமிழாக்கிக்கொண்டாலும், அத்தமிழாக்கத்தை வைத்து ஏலியன்கள் எவை என்பதின் சாத்தியங்களை குறுக்கிவிடக்கூடாது. சொல்லப்போனால் ஏலியன்கள் நம்முடனே இருக்கலாம். மாற்று உயிர் என்று ஒரு நிழல் உயிருருளை (shadow biopsphere), நம்முடனே பூமியில் தழைக்கலாம் என்பதையும் இப்புத்தகத்தில் பார்க்கப்போகிறோம்.

இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் (2010இல்) ஏலியன்களைப்பற்றி அபாயகரமானவர்கள் என்றாரே. ஏன்? சரிதானா? அப்படியென்றால் அவர் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? நிரூபணம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் கூட ஹாக்கிங் ஏலியன்கள் பற்றி கூறியதும் வானத்தில் ஒளி தெரிந்ததாமே. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திட்டவட்டமாக பதில்கூற மறுக்கிறார்களாமே, நிஜம்தானா? மக்கள் பீதி அடைவார்கள் என்று மறைக்கிறார்களா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் கவனிக்கையில், அவ்வப்போது தொடுவானத்தில் ஒளிதெரிகிறதே, அது ஏலியன்களின் விண்வெளிக் கப்பலா? என்ற ஐயங்கள் வினாக்கள்.

இவ்வகைக் கேள்விகளுக்கான பதில்களையும், சார்ந்த அறிவியலையும் விரிவாக ஆனால் எளிமையாக உங்களுக்குத் தருவதே இப்புத்தகத்தின் நோக்கம்.

ஏலியன்கள் இருக்கிறார்களா?

புத்தகத்தினுள் சென்று, தேடுவோமா…

அட்டை வடிவமைப்பு: அருண் | பின் அட்டை சித்திரம்: வசுந்தரா
*

2014 சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம் (ஸ்டால் எண்கள் 436, 437)
ஆன்லைன் ஆர்டர்: <விரைவில்>

அருண் நரசிம்மன் தன்னைப் பற்றி…

நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

அருணை நீங்கள் ommachi என்கிற gmail முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…


நேனோ ஓர் அறிமுகம் –அருண் நரசிம்மன்

$
0
0

nano-front-s

“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தக வித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.

எனக்குப் புரிந்த அறிவியல் எல்லைக்குள், நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி-யை அறிமுகமாய் விளக்க முற்படுகிறேன். உள்ளடக்கத்தின் வசனநடையும் கோமாளி உடையும், அறிவியல் துறையின் தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூகல மனநிலைக்கான பாவனைகளே.

ஆங்கில nano தமிழில் நேனோ-வோ நானோ-வோ? நேனோ என்றே புத்தகத்தினுள் உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கெனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி). நேனோவை அதி-நுண் எனலாம். ஆனால் நேனோ என்றே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ (micro), நேனோ (nano), பிகோ (pico), ஃபெம்ட்டோ (femto), அட்டோ (atto) போன்ற அதி-நுண் அளவைச் சொற்களை, சைக்கிள், பெடல், பிரேக், (குடிக்கும்) காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்களை தமிழில் கொடுத்தால் போதுமானது என்கிற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு நேனோ-ன்னா நேனு நோ நோ என்று வாசிக்காமல் போய்விடாதீர்கள்.

இப்புத்தகத்தை எழுதத் தூண்டுகோலாய் இருந்து, அதை செம்மையாக வெளியிடும் தமிழினிக்கு என் நன்றி.

nano-s

அட்டை வடிவமைப்பு: அருண்

2014 சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம் (ஸ்டால் எண்கள் 436, 437)

ஆன்லைன் ஆர்டர்: <விரைவில்>

அருண் நரசிம்மன் தன்னைப் பற்றி…

நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

அருணை நீங்கள் ommachi என்கிற gmail முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…


டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? –அருண் நரசிம்மன்

$
0
0

arunn-book-3-cover-front-s

அறிவியல் கற்பது கடினம். பாடமாய் கற்க முனைகையில் வாசலிலேயே செருப்பையும்  சிரிப்பையும் கழட்டிவிட்டு, முகத்தையும் மனதையும் சீரியஸாக்கிக் கொள்வது  அவசியம். ஊடாடும் வேறு அறிவுத்துறைகளின், கலைகளின், வாழ்க்கை இயல்பின் தாக்கங்கள் அறிவியலை கற்கையில் கவனக்கலைப்பிலேயே முடியும். அறிவியலின் கடினத்தை பெருக்கி  வெறுத்தொதுக்க வைத்துவிடும்.

மேற்படி கருத்துகள் அறிவுப் பறிமாற்றங்களில் ஈடுபடும் தமிழ்மனங்களில் இருந்து பரிட்சை பேடில் ஒட்டிய பெருமாள் படம் போல லேசில் அகலாதவை. மொத்தமாக சேதாரமின்றி பிரித்தெடுக்கமுடியாதவை.

பள்ளி கல்லூரிகளில் தேர்வு, விழுக்காடு, நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பறிமாறிக்கொள்ளப்படும் அறிவியல் சார்ந்த சில விஷயங்களை, பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் சாய்வு நாற்காலியில் புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம். அறிவியல் கருத்தாக்கங்களில் சமரசமின்றி, ‘போரடிக்காமல்’ பரிமாற முனைந்துள்ளேன்.

பயப்படாதீர்கள். படித்ததும் பீஜிஎம்-மில் “சிங்கமொன்று புறப்பட்டதே” அல்லது “ஓ…ஒரு தென்றல் புயலாகி வருதே” ஒலிக்கும் ஒரு பாட்டு முடிவதற்குள் ஏப்ரன் அணிந்த அறிவியலாளராய் ஆகிவிடமாட்டீர்கள். அறிவியலை, சார்ந்த அறிவுத்துறையை மீண்டும் குண்டுபுஸ்தகங்களில் அணுகுகையில், மனத்திடம் ஒரு சிட்டிகை உங்களுக்கு அதிகமாகலாம். சிலருக்கு ரத்த அழுத்தம்.

வாசிக்கையில், எட்டிப்பார்க்கும் சில ஆங்கில சொற்களில் சுளித்தோ, கலைச்சொல்லாக்கங்களில் தடுக்கியோ, என்வகை நகைச்சுவையில் வெகுண்டோ, புரையேறி தலையில் தட்டிக்கொள்கையில், நினைத்துக்கொள்பவர்கள் யாராயிருக்கும் என்று நீங்கள் விசனப்படலாம். உங்களை நினைத்துக்கொள்வது நான்தான். அறிவியலை தமிழில் நீங்கள் வாசிக்கும் ஆர்வத்திற்கு நன்றியாக.

அட்டை வடிவமைப்பு: அருண் | பின் அட்டை சித்திரம்: வசுந்தரா

*

2014 சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்குமிடம்: அம்ருதா பதிப்பகம் ஸ்டால்
ஆன்லைன் ஆர்டர்: <விரைவில்>

அருண் நரசிம்மன் தன்னைப் பற்றி…

நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

அருணை நீங்கள் ommachi என்கிற gmail முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…


4-தோசையம்மா தோசை – பா.ராகவன்

$
0
0

உடுப்பி உணவு முறையில் பிரதானமாகக் கீரைகள் இருக்கும். பச்சைக்காய்கறிகள் இருக்கும். பழங்கள் நிறைய இருக்கும். நிலத்துக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் ஏதும் இராது. முக்கியமாக வெங்காயம் பூண்டு கிடையாது. முள்ளங்கி கிடையாது. உருளைக்கிழங்கு கிடையாது. அசைவம் ? அறவே கிடையாது. மசாலாப் பொருள்கள் ஏதும் கலக்க மாட்டார்கள். காரம் கம்மியாக இருக்கும். உப்பும் தேவைக்கு ஒரு சிட்டிகை குறைவாகவே இருக்கும்.

சாத்வீக உணவு என்பார்கள். வயிற்றுக்கு எந்தக் கேடும் தராத உணவு. எளிதில் செரிக்கும். நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மிகுதியாக இருக்குமென்பதால் சிறுநீரகப் பிரச்னைகள் ஒருபோதும் வராது.

இத்தகைய சிறப்புகள் மிக்க உடுப்பி உணவுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது இருக்கும். தோசை அதிலொன்று.

உணவின் வரலாறு


6-தோசையம்மா தோசை –பெண்ணே தோசை –தாவணகெரே ஸ்பெஷல்

$
0
0

எப்படித்தான் யோசிப்பார்களோ கர்நாடக மக்கள்! எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் அடையாளத்துடன் ஒரு தோசை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பம்சம். அரிசி தொடங்கி ஜவ்வரிசி வரை எல்லா மாவுகளையும் கலக்கி வார்த்து விடுகிறார்கள். பெண்ணே தோசை அப்படியான ஒரு வெரைட்டி தான். தாவணகெரே நகரின் ஸ்பெஷல்.

பெங்களூரில் இருந்து 265 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்நகரம். கர்நாடகத்தின் ‘காட்டன் சிட்டி’ என்று சொல்லும் வகையில் ஏராளமான பருத்தி மில்களைக் கொண்ட இதன் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று பெண்ணே தோசை. ‘தாவணகெரே பெண்ணே தோசை’ என்றால் கர்நாடக மக்கள் வாயில் தேனூறும். அந்த அளவுக்குச் சுவையும், சுகந்தமான மணமும் கொண்டது.

‘பெண்ணே’ என்றால் வெண்ணை. மாவுக்கு இணையாக வெண்ணையையும் தோய்த்து வார்க்கும் தோசைதான் பெண்ணே தோசை. வெண்ணை கர்நாடக மக்களின் சமையலில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் பொருள். அதிலும், மேய்ச்சல் தொழில் மிகுந்த தாவணகெரே பகுதியில் கிடைக்கும் வெண்ணை முதல்தரமானது. இப்பகுதியில் இருந்து கர்நாடகம் முழுமைக்கும் வெண்ணை அனுப்பப்படுகிறது.


Viewing all 178 articles
Browse latest View live


Latest Images