ஒரு பக்தர் ஸ்ரீ ரமணரிடம் – வேதசாஸ்திரங்களில் தேவதைகளின் சக்திகளைப் பற்றிக் கூறியிருக்கிறதே ? என்று வினவ – ஸ்ரீ ரமணர் – மனிதனாகிய ஒரு ஜீவனிடத்திலேயே – பிராணன், மனம், இந்திரியங்கள் – என்று எத்தனை சக்தி விசேஷங்கள் பொருந்தியிருக்கின்றன ? – என்று கூறினார். அத்தோடு இதே ஜீவனுடத்திலுள்ளதைப் போலவே பரம்பொருளிடத்திலுள்ள – சக்தி விசேஷங்களை வேத சாஸ்திரங்கள் தேவதைகளாகக் கூறுகின்றன – என்றும் சொன்னார்.
-
எனக்கு
எப்போதும் தாய்மடி
ரமணனடி!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
