Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all 178 articles
Browse latest View live

19-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கமல்ஹாசன் எடுத்து முடித்த படத்தில், முதலில் ‘இசையில் தொடங்குதாம்மா‘ பாடலே கிடையாது. படத்தை ஓட விட்டுப் பார்த்த இளையராஜாவுக்கு அந்தக் குறிப்பிட்ட காட்சி வரும்போது அந்த இடத்துக்குள் ஒரு பாடலுக்கான தேவை ஒளிந்து கொண்டு இருப்பது ஒரு தரிசனமாகப் புலப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் கண்ணில் படாத பாடல், எல். சுப்பிரமணியத்துக்குப் புலப்படாத பாடல். அந்தப் படத்தின் எடிட்டர் கூட அதைக் கவனித்துச் சொன்னதாகத் தெரியவில்லை. எப்படி இளையராஜாவுக்கு மட்டும் புலப்பட்டது என்றால், நூற்றுக்கணக்கான படங்களுள் இதுவும் ஒன்று என்று அவர் நினைக்கவில்லை. இருக்கிற பாடல் காட்சிகளுக்குப் பொருத்தமாகத் தாம் புதிய இசை எழுதிக் கொடுத்து விட்டால் போதும் என்று எண்ணவில்லை. இது கமல் படம், தாம் இதில் வெறுமனே சொன்ன வேலையைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால், வேலையில் மூழ்கி விடுவதல்ல உன்னதம். வேலையாகவே மாறிவிடுவதுதான் அது! தானும் தன் செயலும் தனித்தனி என்கிற நிலையைக் கடந்து செயலாகவே தான் மாறிவிடுவது.

இதனைத்தான் ‘கர்மயோகம்‘ என்று பகவத் கீதை சொல்லும். ‘ஜென்‘ என்று பவுத்தம் சொல்லும்.

மிகச் சிறப்பான சாதனைகள் புரிவோரை கவனியுங்கள். அவர்கள் வேலை செய்வதில்லை. வேலையாகவே மாறிப் போகிறார்கள்.நீரில் கரையும் சர்க்கரை போல் உங்கள் பணியுடன் இரண்டறக் கலந்து விடுங்கள். உன்னதம் அங்கே வெளிப்படும்.

–தொடரும்…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்

உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.



சிதம்பரம் கொத்சு! –சமஸ்

$
0
0

‘சமஸ்’ஸி ன் சாப்பாட்டுப் புராணத்துக்குள் போவதற்கு முன் கொஞ்சம் சுய புராணம்…

எனது சொந்த ஊர் கும்பகோணம் என்பதால், இங்கே சமஸ் குறிப்பிட்டிருக்கும் கொத்சும், சிதம்பரம் நடராஜரும் ரொம்பவே பரிச்சயம். சிதம்பரத்தில் மட்டுமல்ல, கும்பகோணத்திலும் கொத்சு ரொம்பவே பிரபலம்.

‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் நண்பர் திருமலை ராஜன். இவர் இங்கே Berkeley Labs-ல் பணி புரிகிறார். மரத்தடி மற்றும் ராயர் காபி கிளப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்பட்டதில்லை என்றால் உங்களுக்கு வயது நாற்பதுக்கும் குறைவு என்று அர்த்தம் :-) ராயர் காபி க்ளப்பில் ராஜனும் ஒரு ராயர் :-) – மற்றவர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், இரா.முருகன் ஆகியோர். நண்பர் திருமலை ராஜனின் இலக்கிய நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது – ஹரன் பிரசன்னா, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுஜாதா தேசிகன், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், விருமாண்டி படத்திலும் அவ்வப்போது மற்ற சில படங்களிலும் தலை காட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்…

-
கடந்த வருடம் அமெரிக்கா வந்திருந்த நாஞ்சில் நாடன் தனது கலிஃபோர்னியா விஜயத்தின்போது, ராஜனின் இல்லத்தில் தான் தங்கியிருந்தார்.

தாளிக்கும் ஓசை‘ ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் கூட எனக்கு ராஜன் மூலமாகத்தான் பரிச்சயம். JSri என்று சுஜாதாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயஸ்ரீ, சுஜாதா இறந்தவுடன் மன வருத்தத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக எழுத்தின் பக்கமே வரவில்லை என்று ராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். சுஜாதாவை ‘பொறுக்கி’ என்று செல்லமாக குறிப்பிடும் அளவுக்கு சுஜாதாவின் வெறி பிடித்த ரசிகை இவர். அப்பாடா, இந்தப் பதிவிலும் நமது சுஜாதாவை இழுத்து வந்து விட்டேன் :-)

‘சமஸ்’ஸி ன் நடையில் கவரப்பெற்று இந்த ‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது :-) ராஜனிடம் இரவல் வாங்கிய புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விட்டு எனக்கே எனக்கு என்று சொந்தமாக ஒரு புத்தகம் வாங்கி விட்டேன் :-)

என்னைக் கேட்டால் புத்தகங்களை இரவல் தரவே கூடாது – திரும்பக் கேட்கா விட்டால் புத்தகங்களையும் – திரும்பக் கேட்டால் நண்பர்களையும் இழக்க வேண்டி வரும் :-)

போதுமே என்னுடைய சுய புராணம்  :-)

ஓவர் டு சமஸ்…

[samsatmjpg.jpg]

ல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், சில ஊர்கள் மட்டுமே கோயிலோடு பிணைந்துவிடுகின்றன. அந்த ஊர்களின் பெயரை உச்சரித்தால் மனம் முதலில் கோயிலையே அவதானிக்கிறது – வாடிகன்போல, கேன்டர்பெரிபோல, சிதம்பரம்போல!

சிதம்பரத்தையும் நடராஜர் கோயிலையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மேலோட்டமாய் யோசித்தால் ஒரு நாட்டியக்காரனின் சாஸ்வதம் தோன்றி மறையும் இந்த இடத்தில், சற்று தீவிரமாய்ப் போனால் ஓர் அமானுஷ்ய உலகம் உங்களை இழுத்துக்கொள்ளும். பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலம். மூன்று நிலைகளில் இறைவன் இங்கு உறைந்திருக்கும் நிலை அருவ நிலை. இறைவனை எப்படி வழிபடுகிறார்கள் தெரியுமா? மந்திர வடிவில். மந்திரத்தில் இறைவன் இருக்கும் இடத்தைத் திருவம்பலச்சக்கரம் என்பார்கள். தன்னையே தேடுவோருக்குத் தன்னையே தரும் இறைவன், லோகாயுதவாதிகளுக்குத் தன்னிடத்தில் ஒன்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறான்; அது… அவனே சொக்கிக் கிடக்கும் கத்திரிக்காய்க் கொத்சு. சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்குச் சம்பா சாதத்துடன் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து, உப்பு, புளி சேர்த்து, சுண்டக் கொதிக்கவிட்டு, பசைப் பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து, நல்லெண்ணையில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்கப்படும் கொத்சை ஒரு துளி சுவைத்துப் பார்த்தால் இறைவனின் மீது பொறாமையே வரும். கடவுளர்களுக்குத்தான் சாப்பாடு எப்படியெல்லாம் வாய்க்கிறது?! இருந்த இடத்திலேயே வேளாவேளைக்கு நோகாமல் கடவுளர்களுக்கு மட்டும் இப்படி விதவிதமான சாப்பாடு கிடைப்பது பொறுக்காமல்தான் கடவுளர்களை மனிதன் சாப்பிடவிடாமல் செய்துவிட்டான்போலும்! அது போகட்டும், சிதம்பரத்தில் கொத்சு நிலைத்து நின்றதே ஒரு பெருமைதான் தெரியுமா?

சிதம்பரத்தில் பெயர் வாங்கினால் நீங்கள் எல்லா ஊரிலும் பெயர் வாங்கிவிடலாம். அதிலும், கச்சேரிக்காரர்களும் சமையல்காரர்களும் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய ஊர் இது. அக்காலத்தில் வித்வான்களையோ சமையல்காரர்களையோ, “சிதம்பரத்தில் உற்சவம், போவோமா?” ஏன்று யாராவது சும்மா கேட்டால் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பொருள். ஏனென்றால், இங்கு வித்வான்கள் ராகத்தைச் சுதி பிறழாமல் வாசித்தால் மட்டும் போதாது. எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த ராகத்தை இசைக்க வேண்டும் என்றும் தெரிந்து வாசிக்க வேண்டும். இதை அறியாமல் மேல வீதியில் காலையில் வாசிக்க வேண்டிய ராகத்தைக் கீழ வீதியில் ராத்திரியில் வாசித்தால் வித்வானை ஊருக்கு மூட்டை கட்ட வைத்துவிடுவார்கள். இப்படிச் சமையலிலும் ஆயிரம் பணிக்கிச் சொல்வார்கள். இதனாலேயே, சிதம்பரத்தில் பல சாப்பாட்டு ஒட்டங்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டன. ஒரே விதிவிலக்கு கொத்சு.

அந்தக் காலத்தில் சிதம்பரம் போனால் கடைகளில் இட்லிக்குச் சட்னி, சாம்பார் வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள்; கொத்சைத்தான் தேடுவார்கள். அந்நாளில், சிதம்பரத்தில் கொத்சுக்குப் பெயர் போன கடைகள் நிறைய இருந்தன. “முருக முதலியார் கடை’, “நாராயணசாமி அய்யர் கடை’, “குமரவிலாஸ்’, “உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று அக்காலத்துக் கடைகள்  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையில் கொத்சு செய்வார்கள். பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் ருசி வித்தியாசப்படும். ஒவ்வொரு கடை கொத்சுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. யார் கடை கொத்சு சிறந்தது என்ற பட்டிமன்றத்தைச் சிதம்பரம் வீதிகளில் சகஜமாகக் கேட்கலாம். இப்போதோ கலிகாலம். சிதம்பரத்திலேயே சாப்பாட்டுக் கடைகளில் கொத்சைத் தேட வேண்டியிருக்கிறது. நல்ல வேளையாக பாரம்பரியம் போய்விடாமல் “உடுப்பி கிருஷ்ண விலா’ஸில் மட்டும் கொத்சு இன்னமும் கிடைக்கிறது. உணவகத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் தெரியும் பழமை கொத்சு ருசியிலும் இருக்கிறது. கடை நிறுவனர் லக்ஷ்மி நாராயண பட் இப்போது இல்லை. கடையை அவருடைய மகன் சுப்ரமண்ய பட் நிர்வகித்துவருகிறார். அவருடன் பேசினோம். “எங்கள் பூர்வீகம் உடுப்பி. சிதம்பரத்தில் கடையைத் தொடங்கியபோது கொத்சு ருசியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த எங்கள் தந்தையார் கொத்சில் கத்திரிக்காயுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்தார். தவிர, உடுப்பி சமையல் பாணியில் கொஞ்சம் வெல்லத்தையும் சேர்த்தோம். இந்தப் புதிய ருசி எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று. இன்றும் அதே பாணி, அதே பக்குவம், அதே ருசி” என்றார் சுப்ரமண்ய பட்.

இப்போது மேஜை முன் நாம். மேஜையில் சுடச்சுட இட்லி, சுண்டியிழுக்கும் கொத்சு. அடுத்து ஏன்ன ஆகியிருக்கும் என்று நீங்கள் யூகித்தது சரிதான். ஆடாத ஆட்டத்தால் அண்டத்தையே ஆட்டிவைக்கும் தில்லையம்பலத்தானே கொத்சில் சொக்கிக் கிடக்கிறான். அப்புறம் நீங்களென்ன, நானென்ன, நாமென்ன பராபரமே?!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து…
தினமணி 2008

[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.


துரித உணவுகளின் தலைவன் – RVS

$
0
0

Venkatasubramanian Ramamurthy

முதலில் நண்பர் RVS பற்றி ஓர் சிறிய அறிமுகம். Facebook மூலமாக சமீபத்தில் தான் இவர் பரிச்சயம். மன்னார்குடிக்காரர். நகைச்சுவை உணர்வு அபாரம். எழுத்து இவருக்கு வசப்பட்டுள்ளது. அவரது முன் அனுமதி பெற்று அவரது ‘துரித உணவுகளின் தலைவனை’ இங்கே பகிர்கிறேன்…

அதற்கு முன் நம் சாவி உப்புமா பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்…

ஊரே மணக்கும் சேமியா உப்புமா – சாவி (பழைய கணக்கு)

சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது. தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

ஒரு நாள் குண்டு அய்யர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார். காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசிக் காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள். குண்டு அய்யர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார். கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சி வேளை ஆகி விடுமாதலால், குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது. காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர். எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே எதாவது டிபன் தயார் செய்து கொள்வார். அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில், ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும், முந்திரியையும் பொன் முறுகலை வறுத்து அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார். தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஓட்டிச் செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார். மோர் சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும். இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால் குண்டு அய்யரின் கை வண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும். கண் முன்னே ஒரு வினாடி கிராமம் தோன்றி மறையும்.

சுவையான சாப்பாடு, மணக்கும் காஃபி இரண்டுமே சாவிக்கு ரொம்பப் பிடித்தவை. ‘நான் சாப்பாட்டு ரசிகன்; சாப்பாட்டு ராமன் அல்ல‘ என்று சொல்வார் அவர். ரொம்பவும் குறைவாகத் தான் சாப்பிடுவார். சாப்பாடு சுவையாக இருக்க வேண்டும். ருசியாகச் சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி ‘வாஷிங்டனில் திருமணத்‘தில் ஒரு வர்ணனை வரும். அதைப் படிக்கும்போதே நாக்கில் ஜலம் ஊறும். அவ்வளவு ரசனையோடு எழுதியிருப்பார். ரவா உப்புமா என்றால் அதற்கு என்னென்ன போட வேண்டும், எவ்வளவு போட வேண்டும் என்பதை அவர் மிக நேர்த்தியாகச் சொல்வார். அவரோடு நான் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் போயிருந்தபோது சமையல் பற்றிய அவரது நுணுக்கமான அறிவைக் கண்டு வியந்து போயிருக்கிறேன்.

ஹாங்காங்கில் நண்பர் பாலன் சச்சித் அவர்கள் வீட்டிலும், சிங்கப்பூரில் நண்பர் யாகப் அவர்களின் வீட்டிலும் “இப்படிச் செய்… அப்படிச் செய்…” என்று அவர் சொல்லச் சொல்ல நான் சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல் எல்லாம் செய்திருக்கிறேன். மணக்க மணக்க கிச்சடியும்ரவா உப்புமாவும் கிண்டிய நாட்கள் மறக்க முடியாதவை.
– ராணி மைந்தன் சாவி – 85   
சாவி-85  நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.

ராணி மைந்தன் குறிப்பிட்ட ரவா உப்புமா பற்றிய சாவி அவர்களின் வர்ணனை இதோ வாஷிங்டனில் திருமணத்திலிருந்து…

வாஷிங்டனில்  திருமணம்

கிச்சனுக்குள் இருந்த வந்த கம்மென்ற வாசனை உள்ளே ரவா உப்புமா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

‘மொத்தமாக ரவா உப்புமா கிண்டுகிறபோது, வருகிற வாசனையே அலாதிதான்’ என்று மூக்கை உறிஞ்சி இழுத்தார் அம்மாஞ்சி.

கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இந்த ஐந்தும் சேருகிறபோது ‘அடடா‘ என்று நாக்கில் தண்ணீர் சொட்டக் கூறினார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

‘பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினு மினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது , அதில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!’ என்றார் அம்மாஞ்சி.

‘வாஷிங்டன் நகரத்திலே வாழை இலை போட்டுச் சாப்பிடறது அதை விட விசேஷம்!’ என்றார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

உப்புமா பற்றி நமது தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்…

பல ஆண்களுக்கு உப்புமா என்றால் அலர்ஜி. பல பெண்களுக்கு உப்புமா (செய்வது) வரப்பிரசாதம் மாதிரி. சின்ன கேப் கிடைத்தாலும் சுலபமாகச் செய்து, தலையில் கட்டிவிடுவார்கள். மரத்தடியில் ஷைலஜா உப்புமா என்றதும் ‘கூப்டீங்களா?’ என்று ஓடோடி வருவார். பொறாமையாக இருக்கும்.

என்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா? தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது? மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ’இதைச் சொல்ல வெக்கமா இல்லையா?’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை. 

ரவை சரியில்லையா இருக்கும்  என்றெல்லாம் சொல்லிப் பார்த்து, ப்ராண்ட் மாற்றி ப்ராண்ட் உபயோகித்தும் சரிவராமல், வாணலி சரியில்லை என்று விதவிதமாக மாற்றிப் பார்த்தும் சரிவராமல்– அதற்காக மனைவியையா மாற்ற முடியும்?– உன்னோட ’வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா?’ என்று பெண் கிண்டலடிக்கும் அல்லது சலித்துக்கொள்ளும் அல்லது என்னை முறைக்கும் அளவுக்குப் பிரசித்தம்.

எப்பொழுதாவது சில சமயம் எனக்கும் மிகப் பிரமாதமாக வந்து ஆட்டத்தில் அதிர்ச்சி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விருந்தினர் யாராவது இருந்தால், எந்த அவசரத்திலும் கூட இந்த முயற்சி எல்லாம் எடுப்பதே இல்லை. ‘சீ, சீ அதெல்லாம் ஒரு டிபனா? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க!’ என்று கெத்தாகப் பேசி நழுவிவிடுவேன். இப்பொழுதும் உப்புமாவை மட்டும் ஒரு புதுப்பெண் மாதிரி பயத்துடனேயே தயாரிக்கிறேன். :( ((

Note from BalHanuman: Over to RVS now…

Venkatasubramanian Ramamurthy

இந்தப் பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் சிலருக்கு தமிழில் உப்புமா, தெலுங்கில் உப்பிண்டி, கன்னடத்தில் உப்பிட்டு என்றால் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில்(கண்கள் சிவக்கச் சிவக்க) “பி-டி-க்-கா-த வா-ர்-த்-தை”. காதை மூடிக்கொண்டு காத தூரம் ஓடிவிடுவார்கள். ஏன் என் சுற்றம் நட்பில் நிறைய பேருக்கு அதைக் கண்டால் முகத்தை சுளிக்க வைக்கும் ஒருவித அஜீரண அலர்ஜி. அஷ்டகோணலாகிவிடும்.

அதையே தாராளமாக அரைப்படி சர்க்கரையைக் கொட்டி ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு கேசரி பவுடர் கொஞ்சம் தூவி இறக்கினால் சிங்கிள் ரவை மிச்சம் வைக்காமல் அந்தக் கேசரியை எல்லோரும் தட்டை நக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். எனக்கு ரவா உப்புமாவும் ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணம் ஆன புதிதில் என் தர்மபத்தினி கொழகொழன்னு மாரியம்மன் கோயில் கூழ் மாதிரி கிண்டின “ரவா உப்புமா” (எ) “ரவா பேஸ்ட்” ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடடா.. என்ன ருசி. என்ன ருசி. அல்வா போல தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பதிலுக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்தேன். “பிடிச்சிருக்கா?” என்று கையில் கரண்டியோடு ஏக எதிர்பார்ப்பில் கேட்டபோது சின்னவ மானஸா மாதிரி கை ரெண்டையும் சிறகாக அகல விரித்து “அவ்ளோ பிடிச்சிருக்கு”ன்னு மனமாரச் சொன்னேன்.

ராத்திரி பதினொன்னரைக்கு பொட்டியும் கையுமாக வந்திறங்கும் திடீர் மாமா-மாமிக்களுக்குப் பசிப்பிணி தீர்க்கவல்லது ரவா உப்மா. பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு பனிரெண்டுக்கு காலை நீட்டிப் படுத்து குறட்டை விடுவார்கள். செய்வதும் ஈசி, உண்பதும் ஈசி. ஜீரணமும் ஈசி. தொட்டுக்க ரெண்டு ஸ்பூன் சர்க்கரை யதேஷ்டம். முதல்நாள் ராத்திரி மாங்காய்த் தொக்கோடு ரவா உப்புமாவை பிசிறி சாப்பிட்ட என்னுடைய உறவினர் ஒருவர் மறுநாளும் நாக்கைச் சப்புக் கொட்டி அதே காம்பினேஷன் ரிப்பீட்டு கேட்டார். ரவா உப்புமா இந்தக் கால ஃபாஸ்ட் ஃபுட்டுக்கேல்லாம் தலைவன்.

அரிசி நொய் உப்புமா வித் கத்திரிக்கா கொஸ்த்து தேவாமிர்தமா இருக்கும். வெங்காய சாம்பார் கூட அதன் பொருத்தமான ஜோடிதான். ஒரு சமயம் கோயில் குளம் என்று மாயவரம் பக்கம் சுற்றியபோது ஊருக்கு வெளியே வாசலில் “டிபன் ரெடி” போர்டு போட்ட சிற்றுண்டி ஹோட்டலில் போய் உட்கார்ந்து ஆசையாய் “இட்லி”ன்னு கேட்டா “ஒரு அரை மணி ஆவும்”ன்னு சொல்லிட்டு பதிலுக்கு அழுக்கு கையை உள்ளே விட்டு தம்ளர்ல தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அகாலத்தில் “வேறென்ன இருக்கு?” என்று பசியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஈனஸ்வரத்தில் முனகியதில் வந்த பதில் “உப்பூ……மா…”. திருப்தியாக ஒரு கட்டு கட்டினேன்.

என்னுடைய உறவினர் வட்டத்தில் காற்றடித்தால் பறந்து மாயமாய் மறையும்படி ஒல்லியாக ஒரு மாது இருப்பார். கை, கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருக்கும் நவீன அணிகலன்களின் எடை அவரை தென்றலாக இருக்கும் வாயுதேவனிடமிருந்து காப்பாற்றும். கைலாயத்தில் சிவபெருமானுக்குச் சேவை புரியும் கிம்புருடர்கள் கழுத்தில் கிடக்கும் எலும்பாபரணமாக இருப்பார். “தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இரு” என்று அடிக்கடி எச்சரிப்பேன். ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் முதல்நாள் முகாமில் இரவு சாப்பிடுவதற்கு தட்டை ஏந்தி “எனக்கு உப்புமா..” என்று கும்பலாக நீட்டியபோது “நீ உப்புமா” என்று நான் சொன்னதற்கு வெகு நேரம் யோசித்தார். “கிண்டல்” என்று புரிந்தும் அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தபோது அவளைச் சுட்டி “நீ”, கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி “உப்பு”, சிரித்துக்கொண்டே “மா” என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன். சற்றுநேரம் வரை மலங்கமலங்க விழித்தது தட்டை கீழே போட்டுவிட்டு கொலைவெறியோடு என்னை துரத்த ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.

“அது ஒரு உப்புமா கம்பெனி சார், எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடிப் போய்ட்டானுங்க” என்று இகழ்வோர் ஏன் உப்புமாவைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. கொஞ்சம் பொடியாய் நறுக்கின கத்திரிக்கா, சாறுள்ள தக்காளி, உருளைக்கிழங்கை சின்னதா நறுக்கிப் போட்டு கடுகு தாளிச்சுக் கொட்டி கிளறி இறக்கினா “கிச்சடி நல்லா இருக்கு.. கிச்சடி பேஷா இருக்கு”ன்னு ஐந்தாறுமுறை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். “இன்னிக்கி ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கலை?” என்று சிரம் தாழ்த்தி அனேக கோடி நமஸ்காரங்களுடன் பவ்யமாக கேட்டால் கூட “ச்சே. இந்த உப்புமா பொறாத விஷயத்துக்கு ஏன் இப்படி கூச்சல் போடரான்”ன்னு சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். ஒதுக்கித் தள்ளட்டும், இருந்தாலும் “உப்புமா பொறாத விஷயம்” என்று சொல்லவேண்டுமா?

சாம்பாரில் வெல்லம் கரைத்து தித்திப்பாக சாப்பிடும் கர்நாடக தேசத்தில் “ரவா பாத்” என்று ஸ்டைலாக பெயர் வைத்து விற்கிறார்கள். பணி நிமித்தம் பெங்களூரூ செல்லும்போதெல்லாம் ரவா பாத்தும் கொஞ்சம் இனிப்பு தூக்கலாக இருக்கும் சாம்பாரும் சேர்ந்து வயிற்றை நிரப்புகிறது. அங்கே பந்தியில் பாயசத்திற்கு பதில் சாம்பார்தான் முதலில் இலையில் வைப்பார்களோ? ஆயாசமாக இருக்கிறது.

இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக சாட்டையடியாக இந்த வாரத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் நாக்கு செத்துப் போன இந்திய கும்பலுக்கு வடிச்சு கொட்டும் Floyd Cardoz என்பவருக்கு சமையல் போட்டியில் $100,000 பரிசு கிடைத்துள்ளது. நியூயார்க் நகரத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்த தப்லா என்ற இந்திய உணவு உபசரிக்கும் ஹோட்டலில் பணிபுரிந்தார் ஃபிளாயிட். தப்லா இப்போது யூனியன் ஸ்கொயர் ஹாஸ்பிடாலிட்டி குரூப்பிடம். கான்சரில் இறந்த தன் தந்தையின் நினைவாக தான் கெலித்த பரிசுத்தொகை முழுவதையும் கேன்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்படி ஒரு உன்னதமான நோக்கத்திற்கு உதவிய உப்புமாவை இனிமேல் யாரும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பார்களா?

ஐரோப்பிய அமெரிக்க இத்தாலிய பீட்ஸா பாஸ்தா போல ஒரு ஆறு மாதத்தில் “டயல் எ உப்புமா” என்று சிகப்பு கலர் பொட்டியை டூவீலர் பின்னால் கட்டிக்கொண்டு அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் கொண்டு வந்து பொட்டலமாய் கொடுத்துவிட்டு போவார்கள். கெட்டிச் சட்னி சாஷேக்களில். “பிச்சூஸ் உப்மா இஸ் மை ஃபேவரிட் ஃபுட்” என்று கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்ட திரையுலகக் கனவுக் கன்னி யாராவது பனியனோடு கவர்ச்சியாக விளம்பரங்களில் வருவார்கள். “சூப்பி உப்புமா” என்று குடிக்கலாம் சாப்பிடலாம் வகையறாவாக வெளியிடுவார்கள். உப்புமாவை நீர்க்க காண்பித்து காஜோலை உறிஞ்சி சாப்பிட வைத்து விளம்பரப் படுத்துவார்கள். இட்லி தோசைக்கு பதில் திஹாரில் உப்மா பரிமாறப்படலாம். வேண்டாத மாப்பிளைக்கு தான் மாமனார் வீட்டில் உப்புமா கிண்டி போடுவார்கள் என்ற எண்ணம் மாறுவது திண்ணம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இனிமேல் உப்மா பிக்கப் ஆயிடும்.

[இன்றைக்கு ஃபேஸ்புக்கில் இரா.முருகன் சார் ரவா உப்புமாவைப் பற்றி எழுதினதும் தலைதெறிக்க இரண்டு வருடம் பின்னால் ஓடினேன். Floyd Cardoz என்கிற மும்பையில் பிறந்து வெளிநாட்டில் வடித்துக்கொட்டிய நளபாகருக்கு உப்புமா கிண்டியதால் $100,000 பரிசு கிடைத்தபோது எழுதியதை இப்போது இங்கே பகிர்கிறேன்.

நான் ஒரு உப்புமா எழுத்தாளன் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இது மற்றுமொரு உப்புமா பதிவு. ]


நூல் அறிமுகம் –வாழ்வு தரும் மரங்கள் –ச.திருமலை ராஜன்

$
0
0

life_trees

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்

தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்

மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்

சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்

சொல்வனத்தில் வெளியான எனது நூல் அறிமுகம் ஒன்று. பாலஹனுமான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

ராஜன்

வாழ்வு தரும் மரங்கள்


18-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

$
0
0

கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.

இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ‘ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்’ என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

ரமண சரிதம் – மதுரபாரதி

ரமணரின் வாழ்க்கை, அவரது பக்தர்களுக்குச் சிலிர்ப்பூட்டிக்கூடியது. நுணுக்கமாக அவரது தத்துவங்களோடு இணைத்து ஆய்வு செய்து அலச விரும்புவோருக்கு வியப்பூட்டக்கூடியது. புரிந்துகொள்ள முடியாத புதிர்மூட்டை இல்லை அவர். மாறாக, தம் வாழ்க்கைக்கும், வெளிப்படுத்திய பேருண்மைகளுக்குமான இடைவெளிகளை அறவே களைந்தவர்.

இந்தியத் தத்துவஞானிகள் வரிசையில், ரமணரை முதலில் நிறுத்துவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை, அவரது வாழ்க்கை உதாரணங்கள் மூலமாகவே சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.


23-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். இரவு. நல்ல குளிர். வழியில் தென்பட்ட ஒரு பவுத்த மடாலயத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு, படுத்தார். நள்ளிரவு குளிர் தாங்கவில்லை. மடாலயத்தில் இருந்த மரத்தாலான சில புத்தர் சிலைகளை எடுத்துக் கொளுத்திப் போட்டுக் குளிர் காயத் தொடங்கி விட்டார்.

Buddha_Statues

அந்த மடத்தில் இருந்த துறவிகளுக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. இதென்ன அக்கிரமம் ? நீயெல்லாம் ஒரு பவுத்தத் துறவியா ? புத்தர் சிலையை எரித்தா குளிர் காய்வாய் ?

போட்டுக் குதறிவிட்டார்கள் அந்தத் துறவியை.

அவர் சொன்னார்: “எனக்குள்ளே இருக்கும் புத்தருக்கு ரொம்பக் குளிர் வந்துவிட்டது. அதனால் இந்தக் கட்டைகளை எரித்து அவருக்கு வெப்பம் கொடுத்தேன். உங்கள் புத்தர் இந்த மரக்கட்டையில்தான் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது!”

இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்பதை இதனைக் காட்டிலும் அழகாக வேறெப்படிச் சொல்ல முடியும் ? இதைத்தான் அகம் பிரம்மாஸ்மி என்று அத்வைதமும் சொல்கிறது.

இளையராஜாவின் இறைவன் இசையாக இருக்கிறபடியால் அவர் அதனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். விளைவு, இசையின் உன்னதம்!

இப்போது நீங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி: உங்களுடைய இறைவன் யார் ? நீங்கள் அவனோடு இரண்டறக் கலக்க இதுவரை என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள் ? எத்தனைக் காலம் தவம் செய்திருக்கிறீர்கள் ?

இந்த இடத்தில இன்னொரு ரகசியத்தையும் சொல்லிவிடுகிறேன். உன்னதத்தை நோக்கிய பயணத்தில் ஆரம்பம்தான் பேஜார். வலிகளும் வேதனைகளும் சரிவுகளும் வீழ்ச்சிகளும் தோல்விகளும் அவமானங்களும் முதலில் கொஞ்ச காலத்துக்குத்தான்.

ஒரு முறை அந்த உயரத்தைத் தொட்டு விட்டீர்களென்றால் பிறகு கீழே விழ மாட்டீர்கள். அதாவது, நீங்கள் அடைந்த உன்னத நிலை உங்களை அத்தனை சுலபத்தில் கீழே விழ வைக்காது.

ஏனென்றால் முன்பே சொன்னது போல் உன்னதம் என்பது ஒரு மனப்பயிற்சி. ஒரு மாணவன் வருடம் முழுக்கத் தன கணக்குப் பாடங்களை தினமும் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, தவறுகளைக் களைந்து, பலப்பல மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்து, ஃபார்முலாக்களை உருப்போட்டு, புத்தி முழுவதும் கணக்காகவே ஆகிவிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இறுதித் தேர்வில் அவனால் ஃபெயில் ஆக முடியுமா ? அவன் கணக்கைக் காதலிக்கவே தொடங்கி விடுவான். வேண்டுமானால் நூற்றுக்கு நூறு வாங்குவதற்கு பதில் தொண்ணூற்றொன்பது வாங்கலாம். கவனக் குறைவாக ஏதாவது அரைப் பிழை, கால் பிழை செய்யலாம். தோற்க மாட்டான் அல்லவா ?

அதுதான். அவ்வளவேதான். உன்னதத்தை நோக்கிய பயிற்சிகள்தான் கஷ்டமே தவிர, அடைந்துவிட்டால் அதன்பிறகு விழுவது அத்தனை சுலபமல்ல! தோற்றே தீர வேண்டும் என்று திட்டமிட்டுத் தோற்றால்தான் உண்டு.

தொடரும்…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்

உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.


26-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

இசைஞானி இப்படி உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. புத்தாண்டு தினத்தன்று கங்கை அமரனின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். முதலில் சாதாரணக் குரலில் ஆரம்பித்தவர், தடதடவென்று படபடக்கத் தொடங்கினார்.

“பத்திரிகைக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் பக்கத்தில் சரஸ்வதி இருக்கிறாள்…”

Take it easy என்று யாராவது ராஜாவுக்கு சொல்லக் கூடாதோ?

தளபதியின் எல்லாப் பாட்டுமே ஹிட்தான் என்றாலும் “யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே‘க்குத் தனி மவுசு.

அந்தப் பாட்டை ஒரு கிசுகிசுத்த குரலில் பாடிப் பரபரப்புப் பண்ணியிருப்பவர் பம்பாய்ப் பெண் மித்தாலி.

பல ஆண்டுகளுக்கு முன் நண்டு படத்துக்கு இளையராஜா இசை அமைத்த போது அதில் கைஸே கஹூன் என்ற இந்திப் பாட்டைப் பாடினாரே அந்த பூபேந்திர சிங்கின் மனைவி தான் இந்த மித்தாலி. தமிழ்ப் பாட்டை இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் அந்த மழலை உச்சரிப்பு.

‘லவ்வுனா லவ்வு, மண்ணெண்ணெய் ஸ்டவ்வு’ என்ற பாடலை (?) மீராவில் பாடிப் பிரபலமடைந்திருக்கிறார் மின்மினி. இசை: இளையராஜா.

பல்வேறு இசையமைப்பாளர்களின் கீழே ஏறத்தாழ நூறு பாட்டு பாடியிருக்கும் இவர், கேரளப் பெண்.

மினி ஜோசப் என்ற பெயரை மின்மினி என்று மாற்றி வைத்தவர் இளையராஜா. (Thou too இளையராஜா?)

சங்கிலி முருகனிடம் ஒரு practical sense இருக்கிறது. பிரசாந்தை வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டு, அச்சாரமும் வழங்கியிருந்தார். பிறகுதான் காதில் விழுந்தது. இளையராஜாவைப் பற்றிய வதந்தி (?) பிரசாந்த் படமென்றால் இசையமைக்க மறுக்கிறார் என்று. ஞானி முக்கியமா, பிரசாந்த் முக்கியமா என்று சங்கிலியார் பூவா தலையா போட்டுப் பார்த்து நேரத்தை வீணடிக்கவில்லை. சென்றார் பிரசாந்திடம் (அல்லது தந்தை தியாகராஜனிடம்). கொடுத்திருந்த முன்பணத்தைத் திறம்ப வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அதற்கு அவர் கையாண்ட modus operandi என்ன ? தெரிந்தால் பல தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

எக்கோ கேசட்காரர்களின் உறவை முறித்துக் கொண்டு ராஜா கேசட் என்று சொந்தமாக ஆரம்பித்திருக்கிறார் இளையராஜா. புதிய நிறுவனத்தின் சின்னம் ஒரு பனையோலை விசிறி.

அடையாறு கேட் ஓட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது இந்த விசிறிக்கு ஆளுக்கொரு விதமாக விளக்கம் சொன்னார்கள்.

ரஜினியின் விளக்கம்:

“திருவண்ணாமலையில் வசிக்கும் ஒரு துறவியிடம் இளையராஜாவிற்கு மகா பக்தி. அந்த மகானின் கையில் எப்போதும் ஒரு பனையோலை விசிறி இருக்கும். அவருடைய நல்லாசிக்கு அடையாளமாக விசிறியைத் தன் நிறுவனத்தின் சின்னமாக வைத்திருக்கிறார் இளையராஜா” என்றார் சூப்பர் ஸ்டார்.

இளையராஜா did not dispute this version. காரணம், அது அவரே சொன்னதாம்.

–தொடரும்…


நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும் –வைகாசி அனுஷம் –மஹா பெரியவா ஜெயந்தி

$
0
0

மேலே உள்ள நரசிம்மர் ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமில்லை, நம்ம ஹிந்து கேஷவ் தான்…

மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!

ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.

நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.

காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.

“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?

அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.

தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.

காஞ்சி மகானின் கருணை நிழலில்



1-விஸ்வரூபம் எடுத்த முருகன் –அரவிந்த் சுவாமிநாதன்

$
0
0

தலைப்பைப் பார்த்தவுடன் “பெருமாள் தானே விஸ்வரூபம் எடுத்ததாகப் படித்திருக்கிறோம், முருகன் எப்போது எடுத்தார், ஒருவேளை சூரசம்ஹாரம் பற்றிய பதிவோ” என யாரும் ஐயுற வேண்டாம். இது பெருமாளைப் பற்றிய பதிவல்ல. வழக்கமாக பாலஹனுமானில் இடம்பெறும் கடவுளைக் குறித்த வியாசங்களுமல்ல. இரா.முருகன் அவர்கள் எழுதிய ”விஸ்வரூபம்” எனும் பிரமாண்ட நாவல் பற்றிய கருத்துரையே இது.

தனக்கென ஒரு தனிப்பாணியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இலக்கிய உலகுக்குத் தந்திருப்பவர் இரா. முருகன். வித்தியாசமான சொல்லாடல்களாலும், கதைப்பின்னல்களாலும், மொழி நடையாலும், நகைச்சுவையாலும் ”சின்ன வாத்தியார்” என்று அழைக்கப்படுபவர். (வாத்தியார் = சுஜாதா என்பது நான் சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும்). முருகனது எழுத்தாளுமையின் முழுத்திறனுடனும் வெளிப்பட்ட நாவல் என்று “அரசூர் வம்சம்” நாவலைச் சொல்லலாம். ”மாந்த்ரீக யதார்த்தம்” என்பதைக் கையில் எடுத்துக் கொண்டு அநாயாசமாக அதில் புகுந்து விளையாடியிருப்பார். தமிழில் அப்படிப்பட்ட நாவல்களை எழுதுவதென்பது எளிதல்ல. எளிதில் சோர்வடைந்து போகக் கூடிய வாசகனை சுவாரஸ்யம் குன்றாமல் படைப்போடு பிணைத்து வைப்பது மிக முக்கியம். தனது மொழியாளுமையால் அதில் வெற்றி பெற்ற படைப்பாளியான இரா. முருகன் அடுத்து எய்திருக்கும் பிரம்மாஸ்திரம் தான் விஸ்வரூபம்.

பெயருக்கேற்றார் போல் உண்மையில் ”விஸ்வரூபம்” எடுத்து நிற்கிறது இந்த நாவல். (கூடவே இரா. முருகனும் தான்) 790 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை, “ மிகப் பெரிய கான்வாஸில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியம்” என்கிறது கவர்ச்சியான முன்னட்டை. அது நிச்சயம் மிகையல்ல. நான்கைந்து பக்கங்கள் எழுதுவதற்குள்ளேயே இங்கே விரல்களும், மூளையும் களைத்து விடுகின்றன. 780 பக்கங்களில் ஒரு நாவல் – அதுவும் குழப்பமோ, அலுப்போ எதுவுமே நேராத ஒரு நாவல் – படைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. அரசூர் வம்சத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் விஸ்வரூபத்தை அரசூர் வம்சத்தைப் படிக்காமலேயே படித்தாலும் புரியும் என்பது முருகனின் குழப்பமில்லா நடைக்கு ஒரு சான்று. நான் கவனித்த வரையில் கிட்டத்தட்ட 8 மொழிநடைகள் (அதற்கு மேலும் இருக்கலாம்) இந்த நாவலில் இருக்கின்றன. இந்தியா, லண்டன், மொரீஷியஸ் என்று பயணக்கும் இந்த நாவலில் சென்னை, திருக்கழுக்குன்றம், புதுச்சேரி, குருவாயூர், அரசூர், மங்கலாபுரம் (மங்களூர்), எடின்பரோ, என்று எத்தனை ஊர்கள்… எத்தனை மொழிகள், கலாசாரச் சூழல்கள்…!!! ஐம்பதிற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள். ஆனால் படிக்கும் போது ஒரு குழப்பமும் நேரவில்லை. எப்படி என்று சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது. இதுவே இப்படி என்றால் இந்த எடிட் செய்யாத வடிவம் நிச்சயம் ஆயிரம் பக்கங்கள் கொண்டதாவது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பல்லாண்டு கால உழைப்பு இதில் இருக்கிறது. நிச்சயம் அசுர உழைப்புதான். அசுர எழுத்துதான்.

மேஜிகல் ரியலிசம் என்பது தற்கால வாசகர்கள் பலருக்கு புதிதாகத் தோன்றினாலும் அது காலம் காலமாக நம்முடன் இருப்பதுதான். உரைநடை என்று எடுத்துக் கொண்டால், ஆயிரத்தோரு இரவு கதைகள், பட்டி-விக்கிரமாதித்தன் கதைகள் என பலவற்றிலும் இருப்பதுதான். இலக்கிய வகையில் பார்த்தால் ”சிலப்பதிகாரம்” மேஜிகல் ரியலிசத்திற்கு சிறந்ததொரு உதாரணம். பாசண்ட சாத்தன் குழந்தையாக வருவது முதல் கோவலன் மற்றும் கண்ணகியின் தாயினது ஆவிகள், கண்ணகி போன்றோர் ஆலயக் கால்கோள் விழாவில் சேரனுடனும், இளங்கோவடிகளுடனும் பேசுவதும் ஒருவிதத்தில் ”மாந்த்ரீக யதார்த்தம்”தான். தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலை சிலம்பில் நாம் காண்கிறோம். கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். சிலம்பில் மட்டுமல்லாது மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற தமிழின் பண்டை இலக்கியங்கள் பலவற்றிலும் “இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகள்” பேசப்பட்டிருக்கின்றன. அந்த இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளே நவீன இலக்கியத்தில் ”மாந்த்ரீக யதார்த்தம்” என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில் ஒரு மாந்த்ரீக யதார்த்த நாவல் விஸ்வரூபம். ஆனால் இதனை மாந்த்ரீக யதார்த்த நாவல் என்று மட்டும் சொலவதை விட அதி புனைவு (hyper fiction) என்று சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். படிக்க ஆரம்பித்த பின் முடிக்காமல் வைக்க முடியாது என்று சொல்வார்கள். அதற்கு இந்த நாவல் ஓர் உதாரணம். காலத்தை முன்னும் பின்னும் பயணிக்கும் கால இயந்திரத்தில் தானும் ஏறி கூடவே நம்மையும் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார் இரா.முருகன். என்ன ஒரு சுவாரஸ்யமான பயணம் அது. சற்றேனும் அலுக்காத பயணமும் கூட. நாவலின் கிண்டலும் கேலியுமான நடை நம்மை ஈர்க்கிறது. ஆங்காங்கே புன்னகையை வரவழைக்கிறது.

ஏப்ரல் 12, 1899ல் ஆரம்பிக்கும் இந்த நாவல் பல ஆண்டுகளைக் கடந்து 1939 பிப்ரவரி ஆறில் முடிகிறது. அதுவும் எந்த அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் ஆரம்பிக்கிறதோ அங்கேயே. ஆரம்பித்தும் முடித்தும் வைப்பவன் நடேசன். ஆனால் அவன் இந்தக் கதையின் நாயகன் அல்ல. இந்தக் கதையின் நாயகன் என்று தனியாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுதான். ஆனால், அப்படியும் சொல்ல முடியாது. ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்தக் கதையின் நாயகன், வில்லன், நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் எல்லாம். அவர் யார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

தொடர்புடைய பதிவு:
இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’

இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்

இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன்  பற்றி ஓர் சிறிய அறிமுகம்…

அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.


2-விஸ்வரூபம் எடுத்த முருகன் – அரவிந்த் சுவாமிநாதன்

$
0
0

இதன் முந்தைய பகுதி…

நாவலில் நாயகன் மட்டுமல்ல; நாயகி என்று ஒருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவள் தெரிசா. வேதமேறிய ஜான் கிட்டாவய்யன் – சிநேகாம்பாளின் புத்திரி. தெரிசாவின் நினைவலைகளாக வரும் பகுதிகள் படிக்க மிக சுவாரஸ்யமானவை. நாவலுக்குள் நம்மை அப்படியே இழுத்துக் கொள்பவை. அந்தக் கால பிராமண பாக்ஷையை மட்டுமல்ல; அந்தக் காலச் சென்னையையும் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் இரா.மு. அத்தியாயங்களை படிக்கப் படிக்க சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை. விதம் விதமான கதாபாத்திரங்களுக்கும் குறைவில்லை. சாமா என்கிற சாமிநாதன், சங்கரன், கொட்டக்குடி தாசி, சுப்பம்மாள், கிட்டாவய்யன், ஜமீந்தார் (மகாராஜா), ஜமீந்தாரிணி (மகாராணி), ராஜாவைத் திட்டி வெறுப்பேற்றும் மாமனார் புஸ்தி மீசைக் கிழவன், பனியன் சகோதரர்கள், கண்ட இடத்தில் பெய்து வைக்கும் வயசன் என்று விதவிதமான கதாப்பாத்திரங்கள் அரசூர் வம்சத்தில் வந்து செல்வார்கள். விஸ்வரூபத்திலும் அவர்களில் சிலர் தொடர்கிறார்கள். குறிப்பாக ராஜா, ராணி, வேதத்தில் ஏறின ஜான் கிட்டாவய்யன், மருதையன், பகவதி போன்றோர். ஆனாலும் அரசூர் வம்சத்தைப் படிக்காமல் இதைப் படித்தாலும் புரிந்து கொள்வதில் ஏதும் குழப்பமிருக்காது என்பது இரா.முருகனது எழுத்தின் பலம். அதேசமயம் இந்த நாவலின் களமும், நடையும், கனமும், புரிபடாதவர்களுக்கு, இந்த வகை எழுத்திற்குப் புதிய வாசகர்களுக்கு மிகப்பெரிய மலைப்பை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை.

நாவலின் கதாநாயகன், வில்லன், நகைச்சுவைப் பாத்திரம், குணச் சித்திர வேடம் என்று முன்பு சொன்னேன் அல்லவா? அது வேறு யாரும் அல்ல; மகாலிங்கய்யன் எனும் கதாபாத்திரம் தான். ஆந்திர தாசியோடும், ரெட்டிக் கன்னிகையோடும், இன்ன பிறரோடும் அவன் அடிக்கும் கூத்துக்கள், வரதராஜ ரெட்டியாய் மாறி செய்யும் செயல்கள், கப்பலில் மொரீஷியஸ் போய் பாக்ஷை தெரியாத ஊரில் நாயகனாய் போடும் ஆட்டங்கள், பின் சொத்தை எல்லாம் கள்ளக் காதலியிடம் இழந்து, மனைவி லோலாவால் விரட்டி அடிக்கப்பட்டு மாறுவேடம் பூண்டு அலைந்து திரிவது, பிணத்தின் கையில் உள்ள ரொட்டித் துண்டுக்கு ஆலாய்ப் பறப்பது, பின் ஜெயிலுக்குப் போவது, விடுதலையாவது, சென்னைக்கு வருவது என காதல், சோகம், வீரம், நகைச்சுவை என எல்லாம் கலந்த கதாபாத்திரம் இந்த மகாலிங்கய்யன். சில சமயம் இந்த மகாலிங்கய்யன்  சினிமா கதாநாயகன் போல் மாறுவேடம் எல்லாம் போட்டுச் சுற்றுகிறான். காதலிகளுடன் சல்லாபம் செய்கிறான். சளைக்காமல், அலுக்காமல் விதம் விதமாய் காமம் துய்க்கிறான். கடைசியில் கப்பலில் கேப்டனுக்கு ‘மூத்திரத் துணி’ தோய்க்கிறான்.

விஸ்வரூபம்” நாவலின் கடைசியில் நம்மைச் சற்றே சோகத்தில் ஆழ்த்தினாலும் நாவலின் உண்மையான ஹீரோ இந்த மகாலிங்கய்யன் தான். அடேயப்பா, அவன் தான் எத்தனை எத்தனை கடிதங்கள் எழுதுகிறான். மனைவிக்குப் போய்ச் சேருமோ, சேராதோ என்ற சந்தேகம் இருந்தாலும் கடிதம் எழுதுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. அவனுக்கு முன்னால் அவ்வப்போது எதிர்ப்பட்டு குடைச்சல் கொடுக்கும் அம்பலப்புழை மகாதேவனின் ஆவி உருவம் வேறு அவனுக்கு பொறுக்க முடியாத துன்பத்தைத் தருகிறது. அதனையும் சகித்துக் கொண்டு ஸ்த்ரீ சம்போகம் சுகிக்க அவன் அலைவதைப் பார்க்கும் போது… மனித மனதின் விசித்திரங்கள் புலனாகின்றன. கடைசியில் மைலாப்பூரில் தான் சம்பாதித்துச் சேர்த்தை எல்லாம் இழந்து தான் வீழ்ந்த வீட்டின் வாசலிலேயே அவன் மரித்துக் கிடப்பதைப் பார்க்கும்போது, இத்தனையும் இதற்குத் தானா என்று தோன்றுகிறது.

அட மனித வாழ்வின் விசித்திரமே அது தானே! ஆனால் அது ஆரம்பத்தில் புரிந்து விடுகிறதா என்ன? (இருந்தாலும் மகாலிங்கய்யனை நீங்கள் சாகடித்திருக்கக் கூடாது முருகன் சார்!, மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு)

நாவலின் மிக நேர்த்தியான, முழுமையான பாத்திரப் படைப்பு இந்த மகாலிங்கய்யன். அவன் எழுதிய கடிதங்களை மட்டும் தொகுத்து தனி நூலாக்கினாலேயே அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என எண்ணுகிறேன். பிஹெச்டி, எம்பில் செய்வோருக்கு மிகச் சரியான நூல் “விஸ்வரூபம்.” இதன் பாத்திரப்படைப்புகள் பற்றி, மேஜிக்கல் ரியலிசம் பற்றி, நாவலின் பன்முகத் தன்மை பற்றி என பல தளங்களில் ஆய்வு செய்யலாம்.

மனித மனம் – அதுவும் ஆணின் மனம் சுற்றிச் சுற்றி காம விசாரணையையே செய்து கொண்டிருக்கும் என்ற ஒரு உளவியல் கூற்றிற்கேற்ப நாவலில் ஒரு சிலர் தவிர காமம் பற்றிப் பேசாத ஆண்களே இல்லை எனலாம். அது நீலகண்ட அய்யரோ, அவன் ஃப்ரெண்ட் நாயுடுவோ, மலையாளத்து மனிதர்களோ எப்படி, எதைப் பேசினாலும் சுற்றிச் சுற்றி அங்கேதான் வந்து முடிக்கின்றனர். நல்ல வேளை எல்லா ஆண்களும் இப்படி இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.

நாவலின் விதம் விதமான மொழிநடைக்கும், சுவாரஸ்யமான உரையாடல்களுக்கும், சம்பவங்களுக்கும் சில உதாரணங்கள்:

”என் சகோதரனும் ஏற்கெனவே பிரஸ்தாபிக்கப்பட்டவனுமான நீலகண்டய்யன் மதராஸ் கலாசாலை ஏற்படுத்திய பி.ஏ.பரீட்சை கொடுத்து எம் தகப்பனார் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கியாதியோடு வகித்து வந்த நாவிகேஷன் கிளார்க் உத்தியோகத்தில் அமர்ந்து தற்போது நொங்கம்பாக்கத்திலேயே நூதன கிரஹம் ஏற்படுத்திக் கொண்டு பெண்டாட்டி, குழந்தைகள் சகிதம்  சுகஜீவனம் செய்கிறான்.” – 1904ல் மகாலிங்கய்யன் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில்…

***

”நேரம் உச்சை கழிந்து ஒரு மணீக்கூராவது ஆகியிருக்குமடா. நீ புனர்பாகமாக வடித்த அன்னம் கொஞ்சம்போல் கழிக்கிறயா? கோழிமுட்டைபோல் திடமான பெலத்தைத் தரும் வஸ்து வேணுமென்றாலும் ஆக்கித்தர காளன் வந்து பரம்பிலே காத்திருக்கான். தாரா முட்டையும் கொண்டு வரச் சொல்லியிருக்கேன்” – ஜான் கிட்டாவய்யன்.

***

“ஜாதியையும் வேதத்தையும் என் வயிறும் மனசும் பார்க்கறதில்லை மாமா. குரிசோ, பூணூலோ இருந்தாலும் அல்லாது போனாலும் எனக்கு ஒருபோலத்தான். என்னமோ ஒண்ணு என்னை வேதமண்ணாவை அண்டி இருக்கச் சொல்லி நச்சரித்துத் துரத்திக் கொண்டிருக்கு. இங்கே திண்ணையில் ஒதுங்கிக் கொண்டு மேலே என்ன காரியம் செய்யச் சொல்லி எல்பித்தாலும் சடுதியில் செய்து முடிக்கறேன்” – துர்கா பட்டன்.

***

விடுதிக்காரன் தெரிசாவிடம் மரியாதை விலகாமல் ஒரு அட்டையை நீட்டினான். இங்கிலாந்தில் தொட்டதற்கெல்லாம் மரியாதை பார்ப்பதைவிட காலே வீசம் அதிகம் ஸ்காட்லாந்தில் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. ”அதிவிநயம் தூர்த்த லட்சணம் என்று இல்லையோ அம்மா சிநேகாம்பாள் சொன்னது” -  எடின்பர்க் பயணத்தின் போது தெரிசா

***

”மெனோபாஸ். அதிலே ஏது ஓய் ஆம்பளைச் சமாச்சாரம்?  இருந்தா சரிதான். நடேசன், கோணகத்தை ஸ்வப்னத்துல நனைச்சுக்கறது நிறுத்திட்டீரா? நம்மாலே அதொண்ணும் முடியலங்காணும்” – ஓர் மலையாளத்து ஆசாமி.

***

நீலகண்டய்யனின்  மனைவி கற்பகம் : உங்க ஆபிசுல பத்து பாத்திரம் தேய்க்க பெண்கள் இருக்காளா என்ன?

நீலகண்டய்யன் : உண்டே. நாந்தான் தேடிப் போய் மடியில உக்காத்தி வச்சுத் தேய்க்கணும்.

***

நீலகண்ட அய்யன் : மேனகா ரிலீஸ் பண்ணச் சொல்ல ஞாபக இருக்கா?

நாயுடு : மேனகாவை எப்படி மறக்க முடியும்? உருண்டு திரண்ட தோளோடு அதே ராஜலட்சுமி. கூடவே ஒரு புதுப்பையன். உடம்பு முழுக்க முத்தம் கொடுத்துக்கிட்டே மூஞ்சிக்கு வருவானேப்பா அந்த நாகர்கோவில் பையன். ஷண்முகமோ ஆறுமுகமோ பேர்.”

நீலகண்ட அய்யன் : அம்புலுவுக்கும் ராஜலட்சுமிபோல் தோளெல்லாம் இருக்குமா?

***

”அய்யங்காரு வந்தாலும் வந்தாரு. மரம் ஏர்றவங்க அல்லாரும் குடும்பம் குடும்பமா தெருவுக்கு வந்துட்டாங்கப்பா. கள்ளை எத்தினி நாளைக்கு நிறுத்தி வக்க முடியும் சொல்லு. ஒரு மரத்துக் கள்ளு மாதா கையால ஊட்டுற கஞ்சித்தண்ணி மாதிரி. ராஜகோபால ஆச்சாரிகள் ஒரு தபா குடிச்சா விடுவாரா அய்யரே?” – நாயுடு

***

பைராகிகள் சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.

பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். – காசியில் ஒரு காட்சி.

***

அவள் கங்கைப் பிரவாகத்தில் நுழைந்தாள். ஆமைகளோ எரியும் உடல்களோ அவசரப்படுத்தும் புரோகிதர்களோ பைராகிகளோ இல்லாத பெருவெளியாக விரிகிற நீர்ப்பரப்பு. தான் தொடும் எதையும் எவரையும் கறை களைவித்து தூய்மையாக்கி நிறுத்தி ஓடும் நதி. மனதிலும் உடலிலும் எல்லா அழுக்கையும் கங்கையின் பிரவாகம் கழுவிக் களையட்டும்.

மனமும்தான் எதற்கு? உடலும்தான் எதற்கு? எதுவும் வேண்டாமே? நீ ரெண்டுமில்லையே? – பகவதி கங்கையில் இறங்கும் முன் அவளது நினைவலைகள்.

***

காசியில், கங்கை நதியில் ஸ்தாலிச் செம்போடு பகவதி இறங்கும் போது நாமும் அல்லவா இறங்கி விடுகிறோம்!!. துர்காபட்டனையும் பரசுவையும் படிக்கும் போது எனக்கு ஏனோ ’பசித்த மானுடம்’ கணேசனும் ஜமீந்தாரும் நினைவுக்கு வந்தார்கள். அங்கேயும் ஹோமோ செக்ஸ். இங்கேயும்…

நாவலில் படித்த நியாயமார்கள் ஒய்ஜா போர்டு வைத்து ஆவிகளுடன் பேசுகிறார்கள். ஆவிகள் நடமாடும் இடங்களுக்கு சுற்றுலாச் செல்கிறார்கள். நம்மூரில் கோயில்களைச் சுற்றி ’நல்லவர்கள்’ அசிங்கம் செய்து வைப்பது போல லண்டனில் சர்ச் வாசலிலேயே போதை வயசன்கள் பரிசுத்த நீர் மழை பெய்விக்கிறார்கள்.

அரசூர் வம்சத்தின் இறுதி அத்தியாயத்தில் வரப் போகும் நாவலுக்குக் கொக்கி போட்டு சில சம்பவங்களைச் சொல்லி முடித்திருப்பார் இரா. முருகன். ஆனால் விஸ்வரூபத்தில் அப்படி இல்லை. எல்லாம் முழுமையாக இருக்கின்றன. இதன் அடுத்த பாகம் (அச்சுதம் கேசவம்) எப்படி இருக்கும் என்ற ஆவலை இப்போதே தூண்டி விட்டார் முருகன்.

நாவலில் குறைகள் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை. நாவலின் பிற்பகுதியில் தாமஸ் மெக்கன்ஸி, பீட்டர் மெக்கன்ஸி ஆகி விட்டார். ஆனால் இது ஒன்றும் பெரிய பிழை என்று சொல்ல முடியாது. அது போல ஸ்காட்லாண்ட் பயனியர் பத்திரிகையில் வந்த விஷயங்களை நாம் தமிழில் – அதுவும் அந்தக் காலத் தமிழில் – படிப்பது ஏனோ கொஞ்சம் ஒட்டாதது போல் தோன்றுகிறது. ஆனால் அதிலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.

நாவலில் சிருங்கார ரசம் மிக மிக அதிகம். அதுவும் இந்த மகாலிங்கய்யன் அடிக்கும் கூத்து இருக்கிறதே அப்பப்பா… மஹாராஜா தோற்றார். ”கம்ப ரசம்” எழுதியது போல் யாரும் “முருக ரசம்” எழுதாமல் இருக்க வேண்டும்.

அழகான ஓவியம். மிக நேர்த்தியான, அச்சு. மொத்தத்தில் விஸ்வரூபம், ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.  இது வெறும் மாஜிகல் ரியலிச நாவல் மட்டும் அல்ல; ஒரு வாழ்க்கை. ஜஸ்ட் வாழ்ந்துதான் பாருங்களேன்!

நாவலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

https://www.nhm.in/shop/Kizhakku/ மற்றும் http://www.dialforbooks.in/ மூலம் புத்தகத்தை வாங்கலாம்.

ஹேட்ஸ் ஆஃப் முருகன். ஜமாய்ச்சுட்டீங்க.

***

தொடர்புடைய பதிவு:
இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’

இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்

இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன்  பற்றி ஓர் சிறிய அறிமுகம்…

அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.


39-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

யாரை “தென்னாட்டு சாந்தாராம்” என்று மக்கள் அழைத்தார்களோ, அன்றைய காலகட்டத்தில் யாரை இளையராஜா ஹீரோவாக நினைத்தாரோ, யார் மேல் அதிக பிரியம் வைத்திருந்தார்களோ அந்த ஸ்ரீதர் இளையராஜாவை இந்த ஆண்டில் பார்க்க வந்தார். கிட்டத்தட்ட 58 படங்களுக்கு இவர் இயக்கிய படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஒரு படத்தில் கூட இவர்களின் கூட்டணியில் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட ஸ்ரீதர் இளையராஜாவிடம் வந்து தான் இயக்கப்போகும் “இளமை ஊஞ்சலாடுகிறது” என்ற படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டிருக்கிறார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

ஓவர் டு இளையராஜா…

டைரக்டர் ஸ்ரீதர் அவர்களை எனக்கும், பாரதிராஜாவுக்கும், அண்ணன் பாஸ்கருக்கும் மிகவும் பிடிக்கும்.

அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்.

வடநாட்டில் சாந்தாராமை ஒரு திரைப்படத்தில் கவிதை எழுதுபவர் என்று சொல்வோம். இங்கே அதேபோல் திரைப்படத்தில் கவிதை சொல்லும் ஒருவர் ஸ்ரீதர் என்று துள்ளுவோம்.

அப்படிப்பட்ட ஸ்ரீதர் அவர்கள் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்திற்கு இசையமைக்க என்னை அழைத்தபோது அதிர்ச்சியாகி விட்டேன்! மகிழ்ச்சிக்குப் பதிலாக ஏன் அதிர்ச்சி என்று நினைப்பீர்கள். அதுவரைக்கும் ஸ்ரீதர் ஸாரோடு M.S.V. அண்ணன் 58 திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார் என்பதை அவர்கள் இருவரும் மறந்திருக்கலாம்.

ஆனால் நான் குறித்து வைத்திருந்தேன் என் நெஞ்சில். எந்த ஒரு படத்திலும் இசையை மட்டம் என்று தள்ளிவிட முடியாது.

அப்படிப்பட்ட M.S.V. யை வேண்டாம் என்று சொல்ல, அவரின் இசை காரணமாக இருக்க முடியாது.

என்னிடம் வருவதற்கு என் இசை காரணமில்லை. இரண்டிற்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது என்றும், என்னை ஜனங்கள் விரும்புகிறார்கள் எனும் அந்த உண்மை மனதில் உறுத்தியது.

அடடா! என்னடா இந்த விவஸ்தை கெட்ட சினிமா உலகம்? இதோடு எப்படி நான் ஒத்துப் போவது ? இன்னும் கொஞ்சம் சினிமாவை தூரமாக்கி இசையை மட்டும் அருகில் வைத்துக் கொண்டேன்.

டைரக்டர்களும், அவர்களின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் எனக்கு இரண்டாம் பட்சம்தான். ஆனால் இசை மட்டும், கதையோடும், பாத்திரங்களோடும், மக்களோடும் ஒட்டி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

என் ஓரோர் பாடலும் வேறோர் பாடலே! இசையமைத்த ஓரோர் படத்தின் பின்னணி இசையும் வேறோர் இசையேஎன்பதில் இன்றுவரை நியாயமாகவே செய்து வந்திருக்கிறேன்.

இதில் ஏதாவது சரியில்லை என்றால் அதன் காரணம் நான் இல்லை. இந்த மாதிரியான மனநிலையில் அப்போதே மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருந்த நான், இவர்கள் வேண்டும்போது ஒத்துக்கொள்ளவோ, வேண்டாம் எனும்போது சும்மா இருப்பதற்கோ, நான் என்ன விலை மாதா ? என்று யோசிப்பேன்.

நான் மிகவும் மதிக்கும் M.S.V. ஐ வேண்டாம் என்று தூக்கியடிக்கிறார்களே ? அப்படிப்பட்ட இவர்களை நான் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தேன்.

100-00-0000-373-6_b

–நன்றி http://ilayaraja.forumms.net/

தொடரும்…


40-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

அந்த நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர், கண்களின் சிகிச்சைக்காக வெளிநாடு போவதாக ஒரு செய்தி இருந்தது.

அது, நாளடைவில் வெளிநாட்டில் இருக்கும் நாட்களை ஏன் வீணாக்க வேண்டும் என்று ஒரு திரைப்படம் எடுக்கும் திட்டமாக மாறிவிட்டது. அந்தப் படத்தில் இசையமைக்க என்னைக் கேட்டுக் கொள்ள ஸ்ரீதர் சார் வந்தார்.

ஏற்கனவே, நான் எடுத்திருந்த முடிவைச் சோதித்துப் பார்க்க, ஒரு சரியான சந்தர்ப்பம். அவரோ பெரிய டைரக்டர், உள்ளே (அதாவது மனதிற்குள்ளே) இப்படிப்பட்டவரைக்கூட வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று பெருமைப்பட ஒரு நல்ல வாய்ப்பு! விட்டு விடாதே! என்றொரு குரல்.

ஆனால், எப்படி ஸ்ரீதர் சாரிடம் சொல்வது ? என்று தயக்கமேற்பட்டது. எடுத்த முடிவு என்னவோ முடிவுதான் என்பதில் நான் மிகவும் பிடிவாதக்காரன்.

என் தயக்கத்திற்குள்ளேயே இரண்டு மூன்று முறை வந்து போய் விட்டார் டைரக்டர். மேலும் இரண்டு முறைகளும் தேடி வந்துவிட்டார். பதில் என்னவோ ஒன்றுதான். சொல்லும் வார்த்தைகள்தான் மாறியது.

“சார் நிறையப் படங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால், குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்குப் பாடல்களைப் பதிவு செய்து கொடுக்க முடியுமோ முடியாதோ? என்று சந்தேகமாக இருக்கிறது” என்றேன்.

“அது பரவாயில்லை ராஜா!” என்றார்.

“நாம ஒரே Composing – ல் எல்லாப் பாடலையும் முடித்து விடலாம்” என்றார்.

“சார், நாளைக்குச் சொல்கிறேனே…” என்று இழுத்தேன்.

மறுநாள், A.V.M – ல் recording – ல் இருந்தேன். ரிகர்சல் முடியும்வரை ஸ்ரீதர் சார் காத்திருந்தார்.

“ராஜா, இதுவரை என் Life – ல் யாரையும் தேடித் போனது இல்லை. ஏன் ? எம்.ஜி.ஆர். கிட்டேயும், சிவாஜி கிட்டேயும் கூட நான் ஆறு தடவை போனது இல்லை. இது 6th time உங்களைப் பார்க்க நான் வந்திருக்கிறேன். என்ன சொல்றீங்க ?”

அவரிடம் நான் சாதாரணமாய்ச் சொன்னேன். ” 6 தடவை நான் உங்கள வரச் சொல்லலியே சார்!…”

அவர் அதிர்ந்து போனாலும், தனது கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ராஜா, ஒரே Composing நான்கு மணி நேரம் போதும்” என்று தொடங்கினார்.

நான் இடைமறித்தேன். “சார், உங்கள் படத்தில் பாடல் சரியில்லையென்றால், ரசிகர்கள் ஸ்ரீதர் பாடல் சரியில்லை என்பார்களா ? என் பாடல் சரியில்லை என்பார்களா ?”

“இல்ல ராஜா!”

“சார் இதுவரைக்கும் 58 படங்களுக்கு M.S.V. அண்ணன் உங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் ஒரு பாடும் சோடையில்ல! அப்படி இருக்க உங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாற முடிக்கிறத்துக்காக, எதையோ Record பண்ணிக் குடுத்து ரசிகர்கள் கிட்ட இருந்து திட்டு வாங்க நான் தயாராக இல்ல. தயவு செய்து, இந்தப் படத்துக்கு வேற யாரையாவது வச்சு முடிச்சுக்குங்க. என்ன மன்னிச்சிருங்க” என்று சொல்லி மறுத்துவிட்டேன்.”

பாஸ்கரும், அமரும், பாரதிராஜாவும், “ஒனக்கு ரொம்ப மண்டைக் கர்வம்” என்று திட்டினார்கள். ஆமாம் கர்வம்தான். அன்று இரவு மகிழ்ச்சியாகத் தூங்கினேன்.

இது, அண்ணன் M.S.V. அவர்களுக்குத் தெரியாது. இந்த நவராத்திரியின் போது வீட்டுக்கு வந்த அவரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். “அப்படியா? அப்படியா ? என்று கேட்டுக் கொண்டார்.

இப்போதும் அந்தக் குணம் அப்படியே தொடர்கிறது. எதற்க்காக ஒரு வேலையை ஒத்துக் கொள்வேன் அல்லது தள்ளி விடுவேன் என்பது யாருக்கும் தெரியாது! ஏன் ? எனக்கே தெரியாது!

படத்தை ஒத்துக் கொள்வதில்தான் எப்படி நடந்து கொள்வேன் என்று சொல்ல முடியாது என்பதில்லை!

எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வேன்? ஏன் அப்படி ? என்றெல்லாம் எனக்கே விளங்காத பல சம்பவங்கள்.

தொடரும்…

100-00-0000-373-6_b


என் பேர் ஆண்டாள் –கட்டுரைகள் –சுஜாதா தேசிகன்

$
0
0

‘என் பேர் ஆண்டாள்’ கட்டுரைத் தொகுப்பு வந்துவிட்டது.

ஓவர் டு தேசிகன்…

எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கத் தான் செய்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அப்படி எழுதியதுதான். சொல்லும் போது ( அறிவியல் கட்டுரைகளைத் தவிர) கொஞ்சம் மிகைப்படுத்தி பொய்யும் சேர்ந்துவிடுகிறது.

போன ஜென்மத்தில் பக்கத்து வீட்டுப் பூனைக்குத் தச்சிமம்மு போட்ட புண்ணியமோ என்னவோ!

A WAY WITH WORDS: Kadugu

“நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி ‘என்னமா கல கல என்று இருக்கிறது!’ என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன் என்று எழுத்தாளர் கடுகு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, என்னைப் போலவே அவரும் மிகைப்படுத்திச் சொல்பவர் என்று தெரிந்துக்கொண்டேன்!.

கட்டுரை தொகுப்பில் என் சொந்த அனுபவங்கள், சுஜாதாவுடன் என் அனுபவங்கள், கொஞ்சம் அறிவியல், பயணக் கட்டுரைகள் என்று வகைப்படுத்தியிருக்கிறேன்.

அட்டைப்பட ஓவியம் என் மகன் அமுதன். அவனுக்கு என் ஸ்பெஷல் நன்றி!.

என் பேர் ஆண்டாள்
கட்டுரைகள்
பத்து பைசா பதிப்பகம் 
பக்கம் 240
விலை ரூ 150/=
கிடைக்கும் இடம் : Dial For Books 
https://www.nhm.in/shop/home.php
+91-9445 97 97 97 


ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பா –சமஸ்

$
0
0

மைசூர் பாகு என்ற பெயரை உச்சரிக்கும்போதே கத்தி, சுத்தியல், கடப்பாறை இன்ன பிற கடின ரக வஸ்துகள் ஞாபகமும் கூடவே வருவது பழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் நாமல்ல, பொறுப்பை இல்லத்தரசிகளும் பத்திரிகை தமாஷ் எழுத்தாளர்களுமே ஏற்க வேண்டும். விசேஷ நாட்களில் முறுக்கு, அதிரசம், பஜ்ஜி, சொஜ்ஜி, சுழியன் போன்ற பாரம்பரிய பலகாரங்களிலிருந்து விலகி, புதிதாக ஏதேனும் செய்து பார்க்க முனையும் பெரும்பாலான இல்லத்தரசிகளின் எளிய இலக்கு மைசூர் பாகு. இந்தப் பரிசோதனை முயற்சியில் களபலியாகும் எளிய இலக்கு கணவன்மார்கள். தமாஷ் எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்லவே. ஆகையால், இல்லாளிடம் பட்டதை எங்கு கொண்டுபோய்க் கொட்டுவது என்று தேடி அலையும் அவர்களுக்கும் மைசூர் பாகு தமாஷ்கள் எளிய இலக்காகிவிடுகின்றன. ‘மைசூர் பாகில் மைசூர் எங்கே?’ என்பதில் தொடங்கி, ‘வீட்டு விசேஷத்துக்கு வந்து ஒரேடியாகத் தங்கிவிட்ட மாப்பிளையைத் துரத்துவதற்கான அஸ்திரமாக மைசூர் பாகைப் பயன்படுத்துவது’ வரை ஆயிரக் கணக்கான கடிகள், தமாஷ்கள் வந்துவிட்டன என்றாலும், விசேஷம் என்று வந்துவிட்டால், மைசூர்பாகும் வந்துவிடுகிறது; தமாஷ்களும் வந்துவிடுகின்றன.

மைசூர் பாகின் பிறப்பிடம் கர்நாடகம். மைசூர் அரண்மனை சமையல்காரர் காகசுரா மாடப்பாவால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாகவும் அதனாலேயே மைசூர் பாகு என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. மைசூர் அரண்மனைக்கு வரும் ராஜ விருந்தாளிகள் அரண்மனையைக் கண்டு எத்தனை வியக்கிறார்களோ அதே அளவுக்கு அங்கு பரிமாறப்படும் மைசூர் பாகின் சுவையை ருசித்தும் வியப்பார்களாம். அத்தனை ருசியாக இருக்குமாம். மைசூர் பாகு செய்ய கடலை மாவு, ஜீனி, நெய் போதுமானவை என்பதால், சமையல்காரர்களிடம் பக்குவம் கேட்டுக்கொண்டு செல்லும் விருந்தினர்கள் ஊருக்குப் போனவுடன் முதல் வேலையாக மைசூர் பாகு செய்வதில் இறங்கிடுவார்களாம். ஊருக்கு ஊர் மைசூர் பாகு இப்படிதான் பரவியது என்று அந்தக் கதை சொல்கிறது. தமிழகத்தில் அனேகமாக இனிப்பகங்கள் உள்ள எல்லா ஊர்களிலுமே மைசூர் பாகு கிடைக்கிறது. லேசுபாசான ஒரு மஞ்சள் நிறத்தில், சற்று நீள வாக்கில், சற்றேழத்தாழ செவ்வக வடிவில், சில இடங்களில் கல்லைப் போல, சில இடங்களில் கொஞ்சம் கொதகொதவென இப்படியான ஒரு வடிவில் அது கிடைக்கிறது. அதாவது, மைசூர் பாகு. மன்னிக்க வேண்டும். உண்மையை விளக்குவது என்றால், வேறு வழியில்லை; சில இனிப்பகக்காரர்கள் இல்லத்தரசிகளையே மிஞ்சிவிடுகிறார்கள் (தமாஷ் எழுத்தாளர்கள் கவனிக்க).

 மைசூர் பாகு எப்படி இருக்க வேண்டும் என்றால், பார்க்க கட்டிப் பதத்தில், ருசிக்க பாகு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது, பற்களுக்கு வேலை இருக்கக் கூடாது. நாவில் கரைய வேண்டும். இது ஒரு ரகசியம். அரண்மனை ரகசியம். நம்மூரில்  ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’காரர்கள் இந்த ரகசியத்தை அறிந்துவைத்திருக்கிறார்கள். நாவில் கரையும் அரண்மனை பதம் இவர்கள் கடை மைசூர் பாகில் கூடியிருக்கிறது. அது ஓர் அறுபதாண்டு கதை.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், ஏராளமான கடைகள் தொடங்கப்பட்டதால், 1950-களில் உணவகத் தொழிலில் கடும் போட்டி உருவானது. சுவை, தரம் மட்டுமன்றி தொழிலைத் தீர்மானிக்கும் காரணியாக விலையும் உருவெடுத்ததால், எல்லாப் பலகாரங்களையுமே நெய்க்குப் பதிலாக எண்ணெயில் செய்யும் கலாசாரம் இக்காலகட்டத்தில் உருவானது. எனவே, உயர் ரக  உணவகங்களில் மட்டுமே பலகாரங்கள் நெய்யில் தயாரிக்கப்பட்டன. ஆகையால், இக்காலகட்டத்தில் பெரும்பாலான உணவகங்களில், ‘எங்கள் கடையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்படுபவை அல்ல’ என்ற அறிவிப்பு, விலைப்பட்டியல் பலகையில் எழுதப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான், 1948-ல் கோயமுத்தூர் கடைவீதியில் ஒரு சின்ன இடத்தில் என்.கே. மஹாதேவ அய்யர் ‘ஸ்ரீ கிருஷ்ண பவன்’ என்ற உணவகத்தைத் தொடங்கினார். அந்த உணவகத்தின் ஒரு பகுதியாக இனிப்பகமும் நடத்தினார். எந்தக் காரியத்திலும் நேர்த்தியையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கும் மஹாதேவ அய்யரின் கடையில் தயாரிக்கப்பட்ட அனைத்துப் பண்டங்களும் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்டன. நியாயமான விலையிலும் விற்கப்பட்டன. மற்ற கடைகளிலிருந்து வித்தியாசமாக, ‘இங்கு தயாரிக்கப்படும் பண்டங்கள் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்படுபவை’ என்ற அறிவிப்பு அவருடைய கடையில் இருந்தது. கோவை மக்களுக்கு மஹாதேவ அய்யரின் வித்தியாசமான இந்த அணுகுமுறை பிடித்திருந்தது. கூடவே, அவருடைய இனிப்புகளும் பிடித்துப்போயின. குறிப்பாக, நெய்யைக் குழைத்துத் தயாரிக்கப்பட்ட மைசூர் பாகு ரொம்பவும் பிடித்துப்போனது. 1964-ல் ராஜா தெருவில் ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ தனியே உதயமானது. இந்த 60 ஆண்டுகளில், 60-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ பரவிவிட்டது. நாடு முழுவதும் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் இவர்களுடைய மைசூர் பாகு பயணிக்கிறது. மைசூர் பாகு பெயரையே கோயமுத்தூர் பாகு ஏன்று மாற்றும் அளவுக்கு பிரசித்தி பெற்றுவிட்டார்கள். கடையை இப்போது மஹாதேவ அய்யரின் மகன்கள் கிருஷ்ணனும் முரளியும் நிர்வகிக்கிறார்கள். பேசினோம்.

”எல்லாரும் கையாளும் அதே கடலை மாவு, ஜீனி, நெய்தான். பக்குவம் ரகசியம். தரத்தைக் கடைப்பிடிக்கிறோம், அவ்வளவே. ஆனால், இவற்றைத் தாண்டி ஒரு காரணம் இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். எல்லோருக்கும் குரல் வளம் இருக்கிறது என்றாலும் எம்.எஸ். அம்மாவின் குரல் நம்மை வாரிச் சுருட்டிக்கொள்கிறதே அதற்கு என்ன காரணம்? எல்லோருக்கும் விரல்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு வீணைக் கலைஞனின் விரல்கள் மட்டும் நம்மை எங்கோ அழைத்துச் செல்ல முடிகிறதே அதற்கு என்ன காரணம்? இதில் வித்தை என்பது ஓரளவுக்கு மட்டுமே சாத்தியம். உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிவதில்லை. அதை அதீதமான அதிர்ஷ்டம் என்பதா அல்லது தெய்வத்தின் அனுக்கிரஹம் என்பதா என்று தெரியவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆசீர்வாதம் எல்லாக் கலைஞர்களையும் சூழ்ந்திருக்கிறது. அவர்களுடைய கலைப் படைப்புகளை அது தனித்துவப்படுத்துகிறது; மகத்துவம் ஆக்குகிறது. எங்கள் கடை மைசூர் பாகுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறோம்” என்றனர் இருவரும்.

ஒரு தட்டில் மைசூர் பாகை வைத்துத் தந்தார்கள். தந்த வேகத்தில் சாப்பிட்டு முடித்து தட்டைத் திருப்பிக் கொடுத்தோம். நம்முடைய பையிலிருந்து ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருந்தது. பையைப் பார்த்தோம். பையிலிருந்த சுத்தியல் ஏமாற்றத்துடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து…
தினமணி 2008

[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.


இடைவேளை –நாவல் விமர்சனம் –சுப்ர.பாலன்

$
0
0

‘ரஷ்யாவில் பனி பெய்தால் இந்தியாவில் சளி பிடிக்கும் என்று ஒருகாலத்தில் சொன்னது உண்டு. இப்போது ரஷ்யா இடத்தில் அமெரிக்கா’- இப்படி ஒரு நிலையை வெகு யதார்த்தமாக எழுதுகிறார் ஆர்.வெங்கடேஷ் தம்முடைய ‘இடைவேளை’ நாவலில். ‘பார்க்கறதுக்குத்தான் ஐ.டி. வேலை கவர்ச்சிகரமா இருக்கும். கீழ விழ ஆரம்பிச்சா பிடிச்சுக்கறதுக்கு ஒரு பிடிமானம் கூடக் கிடையாது’ என்று ஒரு பாத்திரம் பேசுகிறது. அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். இது சமகாலத்தை விளக்குகிற வரலாற்று இலக்கியம். படைப்பிலக்கியத்தில் காலத்துக்குக் காலம் பாடுபொருள்கள் மாறும். சென்ற நூற்றாண்டில் புராணம், வரலாறு, அரசியல், சமுதாயம், கொஞ்சம் அறிவியல், ரோபோக்கள் என்று மையம் கொண்டிருந்த இலக்கிய வளம், இனிமேல் இப்படித் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கையை மையப்படுத்தியே உருவாக வேண்டியது கட்டாயம். நோயாளி மனைவிக்கு மருந்து மாத்திரைகள் தருகிற நிகழ்வில் ‘தினசரி இது ஒரு வேலை’.‘எடுத்துத் தரவேண்டும் என்பது உள்ளூர விகசிக்கும் ஆவல்’என்பதாகட்டும், ‘குழந்தைகள் அருகே எப்போதும் இருக்கும் அப்பாக்களை ஆண்டவன் படைப்பதில்லை’ என்ற வரிகளில் இழையோடும் ஏக்கமாகட்டும் ஓர் உன்னதமான குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கிறார் வெங்கடேஷ். சர்வதேச நிதி நெருக்கடி, ஆட்குறைப்பு, பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற சமகாலப் பிரச்னைகளைப் பற்றிச் சாதாரண வாசகனும் புரிந்து கொள்ளும் விதம் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்க நல்ல நாவல் இது. அனேகமாக ஐ.டி.தொழில்நுட்பப் பிரச்னைகளை மையப்படுத்தித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் புனைகதை இதுவாகத்தான் இருக்கும்.

இடைவேளை (நாவல்), ஆர்.வெங்கடேஷ், விற்பனை உரிமை: வேத பிரகாசனம், தொ.பே.எண் : 044 – 2464 1600. விலைரூ.100/-

–நன்றி கல்கி



மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி –மகாதேவன்

$
0
0

மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

நரேந்திர மோடி, குஜராத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்? மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. இதற்காகத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டன.

நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவநதி ஆக்கியுள்ளார். இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.

உலகின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்ட மோடி, இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குஜராத்தின் சந்து பொந்துகளில் எல்லாம், இளைஞர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்தார். இதன்மூலம் கிராமத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு எளிதாகியது.

அங்கு ஒவ்வொரு மாதமும் நான்காவது வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

புகாருக்கான தீர்வுகள் முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. இப்படியாக தொலை நோக்குப் பார்வை, நேர்மை, செய்நேர்த்தி என திட்டமிட்டுச் செயல்பட்டதன் மூலம் குஜராத்தை ஒளிரச் செய்திருக்கிறார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி, ஆசிரியர்: சரவணன் தங்கத்துரை, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை: ரூ.100/- போன்: 4286 8126

–நன்றி கல்கி

மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன?

குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன்.

அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும்.

இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி.


என்றென்றும் சுஜாதா –அமுதவன்

$
0
0
[Copy+of+Amudhavan.jpg]
மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழ் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொட்டுப்பார்ப்பதாக இருந்ததுதான் நிறையப்பேர் வியக்கவும் விரும்பவும் காரணமாக இருந்தது. தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு அவருடைய பங்கு எத்தகையது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
-
தமிழில் விஞ்ஞானத்தை சுஜாதா அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் வேறு யாருமே எழுதியதில்லை. விஞ்ஞானத்தைக் கட்டுரைகள் வாயிலாக மட்டுமல்லாமல் கதைகளிலும் புகுத்தி தமிழில் விஞ்ஞானக் கதைகளைப் பிரபலமாக்கியவரே அவர்தான். இந்த ஒன்றுக்காகவே தமிழ் நல்லுலகம் அவரை என்றென்றைக்கும் கொண்டாட வேண்டும்.
-
புதுடெல்லியிலிருந்து 1969 அல்லது 1970-ல் பெங்களூரில் குடியேறியதிலிருந்து 1993-ல் குமுதம் ஆசிரியராகப் பணியேற்று சென்னைக்குச் செல்லும் நாள்வரை அவர் பெங்களூர்வாசியாகத்தான் இருந்தார்.
-
அவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் பிரமுகராகவும் உயர்ந்த வேளையில் அவரது வேர்கள் பெங்களூரில்தான் பதிந்திருந்தன. அந்த நாட்களில் அவருடன் எழுத்து, இலக்கியம், பத்திரிகை, சினிமா சார்பாகப் பேசிப் பழக பெங்களூரில் அவருக்குக் கிடைத்த ஒரே நபர் நான் மட்டும்தான்!
-
அந்த நாட்களின் படிப்படியான அவரது வளர்ச்சியை, மகிழ்ச்சியை, சில பொழுதுகளில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை என்னுடன் மனம்விட்டுப் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நாட்களில் எல்லாம் நான் அவருடன் இருந்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த மிக அரிய வாய்ப்பு.
-
ஏறக்குறைய இருபத்தி மூன்று ஆண்டுகள் அவருடன் நெருக்கமாகவும் அவர் சென்னை சென்றபிறகும் கடைசிவரையிலும் தொடர்பு விட்டுவிடாமலும் பழகிய அந்த ஈர நினைவுகளை அந்த அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறேன்.
-
நடிகர் கமலும் சுஜாதாவும் முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை ஏற்கெனவே என்னுடைய இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அந்த ஒரு கட்டுரைக்கே மிகுந்த வரவேற்பிருந்தது. சுஜாதா வாசகர்களும் கமல் ரசிகர்களுமாக மிகவும் ரசித்த அந்தக் கட்டுரையின்போதே சுஜாதாவின் நினைவலைகளை முழுவதும் புத்தகமாக எழுதப் போவதாகச் சொல்லியிருந்தேன். அதைப் படித்ததிலிருந்தே நிறைய இணைய நண்பர்கள் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரப்போகிறது? எழுதிவிட்டீர்களா, எழுத ஆரம்பித்துவிட்டீர்களா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
-
சுஜாதாவுக்கும் எனக்கும் இருந்த நட்பு பற்றி அறிந்த பெங்களூர் நண்பர்களும் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரும் என்று கேட்டபடியே இருந்தனர்.
-
இதோ வந்துவிட்டது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.
-
‘சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன்.
-
சுஜாதா மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப்பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல் க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது………………………………………………..
-
சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும் ஒரு படத்தில் அவர் நடித்தது அவரை நடிக்கவைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச்சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதவை. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து’ என்று முன்னுரையில் சொல்கிறார் விகடன் ஆசிரியர்.
-
இந்தப் புத்தகத்தை முடித்ததும் முதலில் படிக்கக்கொடுத்தது திருமதி சுஜாதா அவர்களிடம். “அப்படியே ஒரு முன்னுரையும் எழுதித் தந்துவிடுங்கள்” என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். முழுவதும் படித்துப் பார்த்து “இந்த நூலில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கீங்க. என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூலுக்கு நானே முன்னுரையும் தருவது நன்றாயிருக்காது” என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் திருமதி சுஜாதா. நூலை முழுவதுமாகப் படித்துப் பார்த்து ஒப்புதல் தந்த திருமதி சுஜாதா அவர்களுக்கு நன்றி.
-
பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ‘சுஜாதா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன்.
-
“அப்படியா நான் கூட அவருடைய ஓவியம் ஒன்றை வரைஞ்சு வச்சிருக்கேன். அவரிடமே தரலாம்னு வரைஞ்சது. அதுக்கான சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டது. அதுக்குள்ள மறைஞ்சிட்டார். இன்னமும் எந்தப் பத்திரிகைக்கும் அதைத் தரலை. பத்திரமா நானே வைச்சிருக்கேன். அவங்க துணைவியாரிடம் தரலாம்னு இருக்கேன்” என்றார்.
-
இந்த புத்தகம் முடிந்ததும் விகடனிடம் சேர்ப்பிக்கும்போது திரு மணியம் செல்வன் சொன்னதை விகடன் பிரசுரத்தின் முதன்மை உதவி ஆசிரியர் திரு அன்பழகனிடம் சொன்னேன். “அப்படியா இதுவரையிலும் பிரசுரமாகாத படம் அவரிடம் இருக்கா? அப்படின்னா அதையே வாங்கி அட்டைப்படமாப் போட்டுடலாம்” என்றார் அன்பழகன். சொன்னபடியே அந்த அழகிய ஓவியம்தான் முகப்புப் பக்கமாய் ஜொலிக்கிறது.
-
இந்த நூலில் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. சுஜாதா பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது குறிப்பாக மூன்றுபேரைத்தான் எந்த நாளும் குறிப்பிட்டுப் பேசுவார். ஒருவர் குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி, அடுத்தவர் விகடனின் முன்னாள் ஆசிரியரும் சேர்மனுமான எஸ்.பாலசுப்பிரமணியம், அடுத்தவர் ஆசிரியர் சாவி. இவர்களில் விகடன் முன்னாள் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்பிரமணியத்தைப் பற்றிய தகவல்களை எழுதியபோது நிறையவே தயக்கம் இருந்து.
-
இவற்றை எல்லாமே அடித்துவிடுவார்கள்; எப்படியும் பிரசுரிக்கப்போவதில்லை எடிட் செய்துவிடுவார்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன். காரணம், நீண்ட நாட்களுக்கு விகடனில் அப்படியான நிலைமைதான் இருந்தது. நடிகர் சிவகுமாரே பல பேட்டிகளில், கட்டுரைகளில் திரு பாலன் அவர்களைப்பற்றிச் சொன்னதை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். விகடன் நிறுவனர் எஸ்எஸ் வாசன் அவர்களைப் பற்றியும்  திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றியும் எந்தப் பாராட்டுக் குறிப்புகளும், புகழுரைகளும் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் இந்த நூலிலும் அதுதான் நடக்கப்போகிறது என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் நிகழாமல் திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி சுஜாதா சொன்னதெல்லாம் வெட்டப்படாமல் வந்திருக்கிறது.
-
அந்த வகையில் எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.
-
சுஜாதா எழுதியதை நிறையப் படித்திருப்பீர்கள். சுஜாதாவைப் பற்றி இதில் படித்துப்பாருங்கள்.
-
விகடன் பிரசுரம் என்பதால் எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
[Copy+of+Amudhavan.jpg]

தட்டே இட்லி –பிடதி ஸ்பெஷல்

$
0
0

thatte_idli_1கர்நாடக ருசி! - Karnataka Rusi!

பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பிடதிக்குச் சிறப்பான அடையாளம் ஒன்று உண்டு. அதுதான் தட்டு இட்லி. கன்னடத்தில் ‘தட்டே இட்லி’ என்பார்கள். தட்டே என்றால் தட்டு. தோசையும் இல்லாத இட்லியும் இல்லாத தட்டை வடிவத்தில் தும்பைப்பூ நிறத்தில், மல்லிகைப்பூ மென்மையோடு இருக்கும் இந்தத் தட்டை இட்லியைப் பார்த்தாலே பசியெடுக்கிறது.

மொழியால் வேறுபட்டுள்ள தென்னிந்திய மாநிலங்களின் பொதுவான அம்சங்களில் முதன்மை இடம் பிடிப்பது இட்லிதான். தவிர்க்க முடியாத உணவு. இடத்துக்கு இடம் வடிவத்திலும், தயாரிப்பு முறைகளிலும் சிற்சில மாற்றங்கள் இருக்குமே ஒழிய தன்மையும், சுவையும் மாறாது. தட்டு இட்லியும் அவ்விதமான வடிவ வேறுபாடு கொண்டதுதான். சுவையிலும், தரத்திலும் நம்மூர் மல்லிப்பூ இட்லியை விட மேன்மையானது.

பிடதிப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ரேணுகாம்பாள் தட்டு இட்லிக்கடை 75 வருட பாரம்பரியம் மிக்கது. நடிகர் ராஜ்குமார் மைசூரு பக்கம் சென்றால் பிடதியில் நிறுத்தி, இங்கு தட்டு இட்லியை ஒரு பிடி பிடிக்காமல் நகர மாட்டாராம். இதன் உரிமையாளர் சிவகுமார், தட்டு இட்லியின் பூர்விகக்கதையைச் சிலாகித்துப் பேசுகிறார்.

“எல்லாரும் விவசாய வேலைக்குப் போறவங்க. தனித்தனியா இட்லியை ஊத்தி அவிச்சுக்கிட்டிருக்க நேரமிருக்காது. அந்தக் காலத்திலே மூங்கிலாலே கூடை மாதிரி முடைஞ்சு, அதில மாவை மொத்தமா ஊத்தி ஆவியில வேக வைப்பாங்க. காலப் போக்குல எவர்சில்வர் தட்டு வந்திருச்சு. இப்போ தனித்தனியாவே ஊத்தி அவிக்கிறோம்” என்கிறார் சிவகுமார். தட்டு இட்லியை உணவகத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரது தகப்பனார் நஞ்சப்பன் தான்.

நம்மூர் இட்லியைவிட நான்கு மடங்கு பெரிதான தட்டு இட்லிக்குக் காரச்சட்னி, சாம்பார், உருளைக்கிழங்கு மசாலா ஆக்கிவி சைட் டிஷ். இவற்றோடு ஒரு வெண்ணை உருண்டையும் தருகிறார்கள். சூடான இட்லியின் மேல் அந்த வெண்ணையை வைக்க, அது நெய்யாக உருகி இட்லியின் மேல் பரவுகிறது. சுகந்தமான வாசனையோடு, பஞ்சு போன்ற இட்லி தொண்டைக்குள் இறங்குவதே சுகமான அனுபவம்.

பிடதி தவிர பெங்களூரு, மைசூரு வட்டாரத்திலும் இந்த இட்லி கிடைக்கிறது. மகாராஷ்டிரா குஜராத் என மாநிலம் கடந்தும் கூட பிடதிக்காரர்கள் சிலர் கடை விரித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சேலம் பகுதியில் தட்டே இட்லியை ருசிக்கலாம். ஆனாலும், பிடதிக் காற்றை சுவாசித்தபடி அதன் பூர்விகச் சுவையோடு தட்டு இட்லியை ருசிப்பது சுகம்தான்!

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 1 கிலோ
உருட்டு உளுந்து – கால் கிலோ
(உடைக்காத கருப்பு உளுந்து)
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – சிறிதளவு

அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்த்து ஒன்றாகக் கரைத்து 10 மணி நேரம் புளிக்க வையுங்கள். புளித்ததும், சிறிது சமையல் சோடா சேர்த்து அகண்டு குவிந்த சில்வர் கப்களில், மாவை ஊற்றி குக்கர் அல்லது இட்லி சட்டியில் வைத்து வேக வைக்க வேண்டும். பத்தே நிமிடத்தில் தட்டே இட்லி தயார்.

thatte_idli_2கர்நாடக ருசி! - Karnataka Rusi!

கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.

பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.
-
நூலாசிரியர் வெ.நீலகண்டன் பற்றி…
தற்போது குங்குமம் வார இதழின் தலைமை நிருபராக பணிபுரிந்து வருகிறார். இவரது எழுத்துக்களில்… கிராமத்து வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரம் குறித்த சிந்தனைகள் மேலோங்கியிருக்கும்.
-
‘நாங்களும் சில பூக்களும், அய்யா வைகுண்டர், ஊர்க்கதைகள், உறங்காநகரம், வெள்ளியங்கிரி யாத்திரை வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள், எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்?’ ஆகியவை இவர் எழுதியுள்ள நூல்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்துள்ள முடச்சிக்காடு இவரது சொந்த ஊர்.

வேதமும் பண்பாடும் –ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்

$
0
0

AMRSarma Sastrigal

‘குமுதம் ஜோதிடம்’ ஆசிரியர் உயர்திரு ஏ.எம். ராஜகோபாலன் (AMR) அவர்களின் அபிப்ராயம் இதோ! (குமுதம் ஜோதிடம் பத்திரிகையில் வெளிவந்த அவரது மதிப்புரை- வேதமும் பண்பாடும் நூல்)

பட்டொளி வீசித் திகழும் தர்மம் – இந்து தர்மம்:
”சனாதன தர்மம்” எனப்படும் இந்து தர்மம் பாரம்பரியம் மிக்க மிகப் பழமையான வாழ்க்கை நெறிமுறையாகும். உலகத்தில் பிற மத நெறிமுறைகள் தோன்றுவதற்கு முன்னரே பட்டொளி வீசித் திகழும் பெருமை பெற்ற கலாசாரம் இது. இது வெறும் மதம் மட்டும் அல்ல. மனித பிறவியின் குண நலன்கள் அடிப்படையில் இயற்கையாக அமைந்து, ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம், நேர்மை, ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வாழ்க்கை நெறிமுறையாகும்.

பிறவியின் நோக்கம்:
பிறவியின் நோக்கம் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, உலக இன்பங்களை தர்ம நெறியின்படி அனுபவித்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு நாம் எவ்விதம் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வழிகாட்டி இந்து தர்மம்.

எத்தகைய துன்பம் நேரிடினும் பகவத் பக்தியுடன் இருந்தால் சோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து நல்லபடி வெளிவந்துவிடலாம் என்பதை வலியுறுத்தும் நெறிமுறை இது. இந்நெறிமுறையானது வேதங்களின் அடிப்படையில் நம் மகரிஷிகள் உபதேசித்தவை ஆகும்.

இத்தகைய புகழ் வாய்ந்த இந்து தர்மம், கலாசாரம், பண்பாடு, ஆகியவற்றை சாதாரன மக்களும் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் “வேதமும் பண்பாடும்” என்ற தலைப்பில் அருமையான புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார்.

இந்து மதம் போதிக்கும் ஆசார அனுஷ்டானங்கள் எத்தகைய உயர்ந்தவை என்பதை மக்கள் அறிவார்கள். அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அவர் இதற்கு முன் எழுதிய “The Great Hindu Tradition” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. இதுவோர் அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

வேதங்களின் பெருமை, மகரிஷிகள், உபநயனம், விவாஹம், பித்ருக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள், மஹாளயம்,ஆகியவற்றை பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார் திரு சர்மா சாஸ்திரிகள்.

உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் அனைவருக்கும் பயன்படக்கூடியது.

Sarma Sastrigal

Online Transfer:
Those who like to get copies of the book THE GREAT HINDU TRADITION from me can e-transfer Rs. 250/- per copy (including courier charges across India) to my bank:

Name: S Swaminatha Sarma
Bank: City Union Bank
Branch: Ashok nagar Extn Counter,
West mamabalam, Chennai
SB A/c No. 130001002115607
IFSC code: CIUB0000130

Email:
After effecting the transfer of course they will intimate the details together with their address to my mail id: sarmasasthrigal at gmail dot com

“Dilip”, a journal from Mumbai which is devoted to Religion and Secience , says about the book ‘The Great Hindu Tradition’ in its Book Review :

“….The essence of rituals, their primary significance, the practical aspects and the required attitude of the performer have all been very nicely brought out in modern idiom by the learned author.

It has several chapters on subjects that include 1) About Vedas 2) Significant rituals 3) Apara Karma and Sraaddha 4) Hundreds of FAQs on daily rituals and culture etc etc. in addition to exclusive chapters on revered Maharishis and Mahabharata.

There has been a great demand for such books among Hindu community people settled abroad particularly those above the age of 30 years.

This book will certainly help to know about Hindu hoary heritage.

It may not be an exaggeration to say that this book will make the younger generation of the community to realise the intricacies of the Vedic way of life…..”


ரவா இட்லி –பெங்களூரு ஸ்பெஷல்

$
0
0

தென்னிந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுக்காரர்களை மயக்கும் அம்சங்களில் இட்லியும் ஒன்று. என்ன மாயமோ தெரியவில்லை. தென்னிந்தியா தாண்டி வேறு எங்கேயும் இட்லியை இட்லியாக அவித்தெடுக்க முடியவில்லை. மல்லிப்பூ பதமும், வடிவமும், சுவையும் நம் மண்ணுக்கே உரித்தான கைப்பக்குவம்.

சகதிமணம் மாறாத தானியங்கள், தட்பவெப்பம், தண்ணீர், ருசி என இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இட்லியை அவித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்று பல கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். சாத்தியமானால் ஊருக்கு ஊர் இட்லி தொழிற்சாலைகள் முளைத்து விடும்.

இட்லி விஷயத்தில் நம்மைவிட கர்நாடக மக்கள் ஏகப்பட்ட பரீட்சார்த்த
முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார்கள். இலை இட்லி, பனையோலை இட்லி, கப் இட்லி என விதவிதமான இட்லிகள் அங்கே கிடைக்கின்றன. ரவா இட்லியும் அப்படியான ஒரு பரீட்சார்த்த முயற்சிதான்.

பெங்களூரு நகரில், லால்பாக் பூங்கா அருகில் உள்ள மாவெல்லி டிஃ பன் ரூம், மல்லேஸ்வரத்தில் உள்ள ஹல்லி மனே, பசவனக்குடி, புல் (Bull) டெம்பிள் சாலையில் உள்ள ஹல்லி திண்டி, இதே பகுதியில் உள்ள சௌத் திண்டி போன்ற பாரம்பரிய உணவகங்களில் இதை ருசிக்கலாம். கேரட்டும், கொத்தமல்லியும் மேலே வண்ணக்கோலமிட, பஞ்சுப்பொதி போல குவிந்திருக்கும் ரவா இட்லியை பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தனியாகவே சாப்பிடலாம் போலிருக்கிறது.

ரவா இட்லியை அறிமுகப்படுத்தியது ‘மாவெல்லி டிஃபன் ரூம்’ தானாம். இந்த உணவகம் 1924-ல் தொடங்கப்பட்டதாம். கர்நாடகத்தின் மிகப் பழமையான உணவகம் இதுதான். இரண்டாம் உலகப் போர்  நடந்த சமயத்தில் நாடெங்கும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கக் கோதுமையை தூளாக்கி, அரிசிக்குப் பதில் அந்த ரவையைக் கொண்டு இட்லி அவித்து விற்பனை செய்துள்ளார்கள். இப்படித்தான் ரவை இட்லி பிறந்துள்ளது.  சுவை வித்தியாசமாக இருக்கவே, காலப்போக்கில் ரவா இட்லி அந்த உணவகத்துக்கே தனிப்பட்ட அடையாளமாகி விட்டது.

ரவா இட்லி வெந்ததும் பரவுகிற வாசனையே பசியைத் தூண்டும். சூடாகச் சாப்பிடுவதே சுவை. கூடவே, தேங்காய்ச் சட்னியும், உருளைக்கிழங்கு குருமாவும் இருந்தால்.. பேஷ்.. பேஷ்..!

தேவையான பொருட்கள்:
ரவா - 1 கிலோ 
உளுந்து - அரை கிலோ 
கடலைப் பருப்பு – 50 கிராம்
புளித்த தயிர் – 100 மிலி
பச்சை மிளகாய் – 50 கிராம்
கேரட் – 2
கடுகு, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கேற்ப

செய்முறை:
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். ரவாவை, நிறம் மாறும் பதத்துக்கு வறுத்து, உளுந்து மாவோடு சேர்த்து, உப்புக் கலந்து கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட் சீவலைப் போட்டுத் தாளித்து, தயிரை ஊற்றிக் கலக்கி, கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கொள்ளுங்கள். விரும்பினால் முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். பின்னர் வழக்கம் போல இட்லித் தட்டில் ஊற்றி அவிக்க வேண்டியதுதான்.


Viewing all 178 articles
Browse latest View live


Latest Images