Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

13-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

நீங்கள் எப்போதாவது தவமிருந்திருக்கிறீர்களா ?  ஆகச் சிறப்பான, அதி உன்னதமான ஒரு செயலை செய்ய வேண்டுமானால் நீங்கள் தவம் இருந்தாக வேண்டும்!

***
செய்க தவம், செய்க தவம் என்று ரயிலைப் பிடிக்கத் துரத்துவது போலத் துரத்துவார் பாரதியார். வேறு வழியே இல்லை. நீங்கள் கவிதை எழுதுபவராக இருந்தாலும் சரி. கசாப்புக் கடை நடத்துபவரானாலும் சரி. ஒரு சாதாரண ஆஃபீஸ் குமாஸ்தாவாக இருந்தாலும் சரி. அமெரிக்க அதிபராகவே இருந்தாலும் சரி.
***
உங்கள் செயலை உலகம் தூக்கி உச்சி முகர வேண்டும். புளகாங்கிதமடைந்து கொண்டாட வேண்டும், கண்ணீர் மல்க உங்கள் கையைப் பற்றிக் குலுக்க வேண்டும், பேச்சு செத்துப் போய் வாயடைத்து நிற்க வேண்டும், பிரமிப்பில் கட்டுண்டு போக வேண்டும் என்று விரும்புவீர்களானால் – ஒரே வழி, தவம் செய்யுங்கள்!
***
என்ன பிரச்னை என்றால் நமக்கு தவம் என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது. தாடியும், சடாமுடியும் வளர்த்துக் கொண்டு, நட்ட நடுக் காட்டில் நாள் கணக்கில், வருடக் கணக்கில் உட்கார்ந்து ஓம் ஓம் என்று ஓதிக்கொண்டிருப்பதுதான் தவம் என்று சட்டென்று ஒரு பிம்பம் மனதுக்குள் தோன்றிவிடும்.
***
அதெல்லாம் டிவி. சீரியல்களுக்குச் சரி. இங்கே நான் குறிப்பிடும் தவம் வேறு.
***
தவம் என்பது காத்திருப்பது.
தவம் என்பது கவனம் குவிப்பது.
தவம் என்பது, ஒரு செயலின் மீது ஆர்வத்தைத் தீயாகப் பொழிந்து கொண்டே இருப்பது.
தவம் என்பது அறிவை வளர்ப்பது.
தவம் என்பது திரும்பத் திரும்பச் செய்து பார்ப்பது.
தவம் என்பது சோர்வுறாமல் இருப்பது.
தவம் என்பது சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவது.
தவம் என்பது விழிப்புணர்வு.
தவம் என்பது நமது மோசமான, சுமாரான செயல்களை நாமே ஒதுக்கித் தள்ளுவது.
தவம் என்பது அதி உன்னதத்தை அடைவதற்கான அத்தனை வழிகளையும் சளைக்காமல் மேற்கொள்வது!
Hey Ram Hindi Film Pictures & Gallery
நீங்கள் ‘ஹே ராம்‘ திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?   கமல்ஹாசன் நடித்த படம். நல்ல படம். ஆனால் ஓடாத படம்.
***
இதுவரை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. இப்போது பாருங்கள். டிவிடி கிடைக்கும்.
***
ஒருவேளை அந்தப் படம் உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். பிரச்னையில்லை. நான் உங்களை அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னது கதைக்காகவோ, கமல்ஹாசனுக்காகவோ அல்ல. இளையராஜாவின் இசைக்காக.
-
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு “சுமார்” சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார் படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப் பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன் வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.


Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles