‘குமுதம் ஜோதிடம்’ ஆசிரியர் உயர்திரு ஏ.எம். ராஜகோபாலன் (AMR) அவர்களின் அபிப்ராயம் இதோ! (குமுதம் ஜோதிடம் பத்திரிகையில் வெளிவந்த அவரது மதிப்புரை- வேதமும் பண்பாடும் நூல்)
பட்டொளி வீசித் திகழும் தர்மம் – இந்து தர்மம்:
”சனாதன தர்மம்” எனப்படும் இந்து தர்மம் பாரம்பரியம் மிக்க மிகப் பழமையான வாழ்க்கை நெறிமுறையாகும். உலகத்தில் பிற மத நெறிமுறைகள் தோன்றுவதற்கு முன்னரே பட்டொளி வீசித் திகழும் பெருமை பெற்ற கலாசாரம் இது. இது வெறும் மதம் மட்டும் அல்ல. மனித பிறவியின் குண நலன்கள் அடிப்படையில் இயற்கையாக அமைந்து, ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம், நேர்மை, ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வாழ்க்கை நெறிமுறையாகும்.
பிறவியின் நோக்கம்:
பிறவியின் நோக்கம் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, உலக இன்பங்களை தர்ம நெறியின்படி அனுபவித்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு நாம் எவ்விதம் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வழிகாட்டி இந்து தர்மம்.
எத்தகைய துன்பம் நேரிடினும் பகவத் பக்தியுடன் இருந்தால் சோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து நல்லபடி வெளிவந்துவிடலாம் என்பதை வலியுறுத்தும் நெறிமுறை இது. இந்நெறிமுறையானது வேதங்களின் அடிப்படையில் நம் மகரிஷிகள் உபதேசித்தவை ஆகும்.
இத்தகைய புகழ் வாய்ந்த இந்து தர்மம், கலாசாரம், பண்பாடு, ஆகியவற்றை சாதாரன மக்களும் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள் “வேதமும் பண்பாடும்” என்ற தலைப்பில் அருமையான புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார்.
இந்து மதம் போதிக்கும் ஆசார அனுஷ்டானங்கள் எத்தகைய உயர்ந்தவை என்பதை மக்கள் அறிவார்கள். அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அவர் இதற்கு முன் எழுதிய “The Great Hindu Tradition” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. இதுவோர் அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
வேதங்களின் பெருமை, மகரிஷிகள், உபநயனம், விவாஹம், பித்ருக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள், மஹாளயம்,ஆகியவற்றை பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார் திரு சர்மா சாஸ்திரிகள்.
உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் அனைவருக்கும் பயன்படக்கூடியது.
Online Transfer:
Those who like to get copies of the book THE GREAT HINDU TRADITION from me can e-transfer Rs. 250/- per copy (including courier charges across India) to my bank:
Name: S Swaminatha Sarma
Bank: City Union Bank
Branch: Ashok nagar Extn Counter,
West mamabalam, Chennai
SB A/c No. 130001002115607
IFSC code: CIUB0000130
Email:
After effecting the transfer of course they will intimate the details together with their address to my mail id: sarmasasthrigal at gmail dot com
“Dilip”, a journal from Mumbai which is devoted to Religion and Secience , says about the book ‘The Great Hindu Tradition’ in its Book Review :
“….The essence of rituals, their primary significance, the practical aspects and the required attitude of the performer have all been very nicely brought out in modern idiom by the learned author.
It has several chapters on subjects that include 1) About Vedas 2) Significant rituals 3) Apara Karma and Sraaddha 4) Hundreds of FAQs on daily rituals and culture etc etc. in addition to exclusive chapters on revered Maharishis and Mahabharata.
There has been a great demand for such books among Hindu community people settled abroad particularly those above the age of 30 years.
This book will certainly help to know about Hindu hoary heritage.
It may not be an exaggeration to say that this book will make the younger generation of the community to realise the intricacies of the Vedic way of life…..”
