Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all articles
Browse latest Browse all 178

நூல் விமர்சனம்: Quitters Inc –டாக்டர் கிருபாநிதி

$
0
0

Inline image 2Inline image 1

Stephen King ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த horror genre எழுத்தாளர்களில் ஒருவர்.

எப்படிய்யா இந்தாளுக்கு இப்படியெல்லாம் plot தோணுது! அப்படின்னு ஆச்சர்யப்படுத்தும் writing machine.

அவர் எழுதிய பல கதைகளில் Quitters Inc என்ற சுமார் முப்பது பக்கக் கதையின் சுருக்கம் இங்கே. முழுதும் படிக்க நினைக்கும் நண்பர்கள் இந்தக் கதையை Night Shift கதைத் தொகுப்பில் படித்து இன்புறலாம்.

Dick Morrisonன்னுக்கு சிகரெட் ஆறாவது விரல் போல் கையில் எப்போதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.over weight. ஆஃபிஸ் வேலையிலும் மேலே போவது போல் தெரியவில்லை. போதாக்குறைக்கு mentally retarded son க்கான special school fees ப்ச்…பல problems!

ஒரு நாள் ஏர்போர்ட் லவுஞ்சில் பழைய நண்பன் Jim McCann ஐ சந்திக்கிறான். கடுமையான smoker ஆக இருந்த Jim இப்போது அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டதாகவும் அதன் பின் career லும் personal life லும் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் வெயிட் கூட குறைத்து fit ஆகியிருப்பதாகவும் சொல்கிறான். “இந்த சனியன் பிடிச்சப் பழக்கத்தை விட்டு ஒழி, இந்தா, இந்த visiting card ஐப் பிடி. இந்த address க்குப் போனால் இந்தப் பழக்கத்தை விட்டொழிக்க உதவுவார்கள்.” என்று சொல்லி ஒரு card ஐக் கொடுக்கிறான். Quitters Inc என்று போட்டு இருக்கும் அந்த இடத்தின் ட்ரீட்மென்ட் முறைகளைப் பற்றி பேச மறுக்கும் Jim “போய்ப் பார்.உன் வாழ்க்கை மாறும்”என்று மட்டும் சொல்லிப் போகிறான்.

பகட்டாக இருக்கும் Quitters Inc office க்குப் போகும் Dick ஐ அங்கே Vic Donatti என்பவர் சந்திக்கிறார். Non disclosure agreement ஒன்றில் Dick இடமிருந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு மறு நாள் வரச் சொல்கிறார் அவர். “நாளையிலிருந்து சிகரெட் பிடிக்க மாட்டீர்கள். இன்னிக்கே எவ்வளவு வேணும்னாலும் குடிச்சிக்கோ ராஜா” என்று அனுப்பி வைக்கிறார் Donatti .

மறுநாள் வரும் Dick ஒரு room க்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.அங்கு இருக்கும் ஒருவரின் Photo-வைக் காட்டி இவர்தான் இந்த கம்பெனியை ஆரம்பித்தவர் என்றும், சிகரெட் பிடித்து நோய்வாய்ப்பட்ட அவர் இந்தப் பழக்கம் இருக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக இறப்பதற்கு முன் இதை ஆரம்பித்து சொத்து முழுவதையும் இதற்கே எழுதி வைத்து விட்டதாகவும் சொல்கிறார் Donatti. அவர் ஒரு மாஃபியா பாஸ் என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறார்.

ட்ரீட்மென்ட் ஆரம்பித்துவிட்டதாகக் கூறி Dick இடமிருந்து சிகரெட் பாக்கெட்டை வாங்கும் Donatti ஒரு குரூரப் புன்னகையுடன் அதை சிதைக்க ஆரம்பிக்கிறார்.கீழே உள்ள கடையில் எல்லா ப்ராண்டும் கிடைக்கும் என்று கூறும் Dick ஐ அழைத்து அந்த ரூமில் உள்ள curtain ஐ விலக்கி அடுத்த ரூமைக் காட்டுகிறார்.அங்கே ஒரு முயல் தட்டில் எதையோ கொறித்துக் கொண்டிருக்க Donatti ஒரு switch ஐ அழுத்துகிறார். முயல் தரையிலிருந்து எம்பிக் குதிக்க ஆரம்பிக்கிறது.”தரையில் மைல்ட் எலக்ட்ரிசிட்டி பாய்கிறது” என்கிறார். “எனக்கு ஷாக் ட்ரீட்மென்ட்டா?” என்று பயத்துடன் கேட்கிறான் Dick. “இனிமே நீங்க சிகரெட் புடிச்சிங்கன்னா, shock உங்களுக்குத் தர மாட்டோம், உங்க மனைவிக்குத் தருவோம்!”என்கிறார் Donatti.

“எங்க மெத்தட் ரொம்ப சிம்பிள். அடுத்த 12 மாசத்துக்கு எங்க ஆட்கள் உங்களைக் கண்காணிச்சிட்டே இருப்பாங்க.அவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியாது.ஆனா நீங்க முதுகு சொறிஞ்சாகூட எங்களுக்குத் தெரியும்.எங்களுக்குத் தெரியாம நீங்க முதல் தடவை சிகரெட் புடிச்சிங்கன்னா அடுத்த அரை மணி நேரத்தில் உங்க மனைவி இங்க இருப்பாங்க.அவங்களுக்கு மைல்டா எலக்ட்ரிக் ஷாக் கொடுப்போம்.அதுக்கும் கேக்காம இரண்டாம் தடவை பத்த வைச்சிங்கன்னா,நம்ம பசங்க இரண்டு பேர் உங்க மகன் படிக்கும் ஸ்கூலுக்குப்போய் அவனை ‘ஸ்பெஷலா‘ கவனிப்பாங்க. ஐய்யோ, பாவம்,அவனுக்கு மூளை வளர்ச்சி குறைச்சலா இருக்கிறதனால அப்பா செஞ்ச தப்புக்கு தனக்குத் தண்டனைனு கூடப் புரியாது,அடுத்தடுத்து நீங்க புகைக்கிற சிகரட்டுகளுக்கு ஏத்தபடி உங்க மனைவி,பையன் இரண்டு பேருக்குமே ஷாக்,கவனிப்பு இப்படி அதிகப்படித்திகிட்டே போவோம்.99.9% பேர் இப்படியான எங்கள் ‘treatment‘ னால் பழக்கத்தை விட்றுவாங்க!”என்கிறார் Donatti.

“பழக்கத்தை விடாத அந்த .1% என்று நடுங்கும் குரலில் கேட்கிறான்,Dick.

“ஓ! அந்தக் கழிசடைகளைக் கூட அப்புறம் ஒரு சிகரெட்கூட பிடிக்க நாங்க விடல,தெரியுமா.” என்று சொல்லிக்கொண்டே டிராயரிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து மேசை மேல் அலட்சியமாகப் போடுகிறார்,Donatti!

அடுத்தடுத்த நாட்களில் மிகவும் சிரமப்பட்டு சிகரெட் புகைப்பதைத் தவிர்க்கிறான் Dick. “ஏன்,இவ்வளவு கஷ்டப்படுகிறாய்?”என்று ஆச்சர்யமாகக் கேட்கும் மனைவிக்கு “எல்லாம் உங்களுக்காகத்தான்!”என்று பதிலளிக்கிறான்.

ஒரு நாள் traffic jam-ல் ஒரு tunnel-ல் காரில் சிக்கிக்கொள்ளும் Dick, glove compartment-ல் இருக்கும் சிகரெட் பாக்கெட்டிலிருந்து அது அங்கே இருந்ததை அவனே மறந்துவிட்டிருந்தான்) ரகசியமாக ஒரு தம்மைப் பற்ற வைக்கிறான். வீட்டுக்கு வந்து பார்க்கும்போது மனைவி இல்லை. Donatti யிடமிருந்து வரும் ஃபோன் அவனை Quitters Inc office க்கு உடனே வந்து மனைவியை அழைத்துச் செல்லுமாறு பணிக்கிறது.ஆஃபிஸில் அவன் கண் முன்னாலேயே அவன் மனைவிக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகிறது.வீட்டுக்குத் திரும்பும்போது நடந்ததை எல்லாம் மனைவியிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான் Dick.

ஆறு மாதங்களாக முழுவதும் புகைக்கும் பழக்கத்தை விட்டொழித்திருக்கும் Dick ஐ திடீரென்று ஒரு நாள் ஆஃபிஸுக்கு அழைக்கிறார் Donatti. “நான் ஒரு சிகரெட் கூட புகைக்கவில்லையே”என்று நடுங்கும் குரலில் Dick கூற “தெரியும். இது வேறு விஷயம்!”என்று சொல்கிறார் Donatti.

Office ல் promotion வந்திருக்கிறது போல் இருக்கிறது, congratulations “என்று பேச்சை ஆரம்பிக்கிறார் Donatti. “உங்கள் உயரத்திற்கு நீங்கள் இருக்க வேண்டிய வெயிட் இவ்வளவுதான்,ஆனால் நீங்கள் இருபது பவுண்டு ஓவர் வெயிட்.உங்களுக்கு இரண்டு மாதம் டைம்.அதற்குள் குறைத்துவிடுங்கள்”என்கிறார்.

“இரண்டு மாதத்தில் என்னால் வெயிட் குறைக்க முடியவில்லை என்றால்……”என்று அழாக்குறையாக கேட்கிறான் Dick.

“உன் wife வலது கை கட்டை விரலை எடுத்துடுவோம்”என்று குரூரப் புன்னகையோடு சொல்கிறார் Donatti.

கஷ்டப்பட்டு எடையைக் குறைக்கும் Dickற்கு இரண்டு மாதம் கழித்து Quitters inc லிருந்து ஒரு பில் வருகிறது.Treatment charges 2000 dollars + electricity charges 50 cents என்று போட்டிருக்கிறது. ‘அடப்பாவிகளா!’ என்று நினைத்துக் கொண்டு cheque போடுகிறான் Dick.

கொஞ்ச நாள் கழித்து ஒரு பார்ட்டியில் Jim McCann ஐயும் அவன் மனைவியையும் சந்திக்கிறார்கள் Dick உம் அவன் மனைவியும். Jim ன் மனைவியை அதற்கு முன் சந்தித்திராத Dick அவளுடன் கை குலுக்கும்போது ஏதோ வித்தியாசமாக உணர்கிறான்.

கூர்ந்து கவனித்தால் Jim ன் மனைவிக்கு வலது கை கட்டை விரல் missing!!!

Krupanidhi Vramanan



Viewing all articles
Browse latest Browse all 178

Trending Articles